Header Ads



இன்று விசேட சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (17) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

மக்கள் நடமாட்டம், ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு, ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள் நடத்துவதை தவிர்க்குமாறு அவர் தெரிவித்துள்ளதுடன், மக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

11 ஆம் திகதிக்கு பின்னர் அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்து பயன்பாடும் அதிகரித்துள்ளதால், கடந்த 2 மாதங்களைவிட தற்போதே கூடுதல் அவதானம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட இன்னும் சிறிது காலம் தேவை எனக்; குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் இக்காலப்பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.