Header Ads



இலங்கை – சீன அரச தலைவர்கள், தொலைபேசியில் பேசிக்கொண்டது என்ன..?


ஒரு தீர்மானம், ஒரு நோக்கம் தொனிப்பொருளின் கீழுள்ள கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஸி ஜிங் பின் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இடையில் நேற்றிரவு நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய முன்னணி வேலைத்திட்டங்கள் தொடர்பாக 2 நாடுகளும் நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை தொடர வேண்டும் என சீன ஜனாதிபதி யோசனை கூறியதாக 2 நாடுகளினதும் ஜனாதிபதிகளின் தொலைபேசி உரையாடலை மேற்கோள்காட்டி ஷிங்ஹூவா செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

Covid – 19 தொற்றை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் உறுதிப்படுப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக சீனா போராடிய தீர்மானமிக்க தருணங்களில் இலங்கை சமூகம் வெவ்வேறு பிரிவுகளில் வழங்கிய ஆதரவை சீன ஜனாதிபதி இதன்போது நினைவுகூரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் Covid – 19 தொற்றை தடுக்கும் செயற்பாட்டை இலங்கை சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சீன ஜனாதிபதி, அதற்கு தமது நாடு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Covid – 19 தொற்று பரவியபோது இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜைகளை பாதுகாத்தமைக்கு தமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி, தமது நாட்டில் இருக்கும் இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார்.

Covid – 19 தொற்றை கட்டுப்படுத்துமவதற்கு சீனா எடுத்த நடவடிக்கைகள் அதிசிறப்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் நிச்சயம் Covid – 19 தொற்றை விரைவாக வெற்றிகொள்வார்கள் என தாம் நம்புவதாக சீன ஜனாதிபதி ஸி ஜின் பின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியை கருத்திற்கொண்டு பல வருடங்களாக சீனா வழங்கிவரும் பெறுமதி வாய்ந்த ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

சீன முயற்சியான்மையாளர்களிடம் தொடர்ந்தும் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொருளாதார வர்த்தக சுற்றுலா மற்றும் அடிப்படை வசதிகள் பிரிவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் இணைந்து செயற்படத் தயார் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

துறைமுக நகரம் போன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக முன்கொண்டு செல்ல இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.