Header Ads



வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள்


கல்விக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பிய தனது மகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாமல் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்க அனுமதி வழங்கியதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அஜித் ரோஹணவின் புதல்வி தெரிவித்துள்ளார். 

தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தான் பெலாறுஸ் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதாகவும் அங்கு 400 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இறுதியாண்டு பரீட்சை நிறைவடைந்ததன் பின்னரே தான் இலங்கைக்கு வருகைதந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.