Header Ads



சஜித்தின் மே, தினச் செய்தி

உலகில் மில்லியன் கணக்கான வேலை செய்யும் மக்களுக்கான தினமாக மே தினமானது சர்வதேச ரீதியில்  அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பில்லியன் கணக்கான மக்கள் வீட்டுக்குள் அடைப்பட்டு இருக்கவேண்டிய சூழ்நிலை ஒன்றிலேயே இந்த வருட மே தினம் உதயமாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மேதினத்தை முன்னிட்டு அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவ,

கொரோனா அனர்த்தத்தின் மூலமாக உலகத்தின் இருப்பான  நிலையானது அசாதாரண நிலையாக மாறி இருக்கின்றது. எனும் இந்த அசாதாரண சூழ்நிலையில் கூட தமது உயிரை பணயம் வைத்து வேலை செய்கின்ற பாரிய அளவிலானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எனது மரியாதையை சமர்ப்பணம் செய்கின்றேன்.

நாள் சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள், போக்குவரத்து சேவை பணியாளர்கள்,  துறைமுகம் சார்ந்த சுய தொழிலில் ஈடுபடுகின்ற பணியாளர்கள், புடவை உற்பத்தி பணியாளர்கள், மத்தியகிழக்கு பணியாளர்கள், அபிவிருத்தித் துறையின் பணியாளர்கள், சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மற்றும்  பணியாளர்கள் விவசாயத்துறையின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டிருப்தனால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் விவசாயிகள், தேயிலை மற்றும் பெருந்தோட்டத்துறை ஊழியர்கள், கடற்றொழிலாளர்கள்,  வியாபாரிகள் உட்பட அனைத்து வேலைசெய்யும் மக்களும் தற்போது பாரிய சிக்கலுக்கு முகம் கொடுத்தவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் வாழ்வதற்கான உதவியையும் வசதிகளையும் பெற்றுக்கொடுக்க  வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எமது தாய் நாட்டின் நலனுக்காக பாரியளவில் அர்ப்பணிக்கின்ற, வியர்வை சிந்திக்கின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய நிலையில்  உலகம் முழுவதிலும் வாழ்க்கை நிலை பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன் எதிர்காலத்தில் பொருளாதார தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதாக அடையாளங்கள் காணக் கிடைக்கின்றது.

இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த வேலை செய்யும் மக்களின் முன்னாலும் எதிர்காலம் குறித்த கேள்விகள் காணப்படுகின்றன.

அந்த வகையில் இந்த மே தினம் மற்றைய மே தினங்களிலும் பார்க்க மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துதாக அமையலாம்.

ஆயிரக் கணக்கிலான வேலைகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உருவாகி இருப்பதுடன் வாழ்வதற்கான போராட்டம் பாரிய போராட்டமாக மாறியிருக்கின்றது. தொழில்களை பாதுகாப்போம் வாழ்வதற்கான உரிமையை காப்போம் என்பது இவ்வருட மே தினத்தின் கருப்பொருளாக அமையவேண்டும் என்பது எனது கூற்றாகும்.

வேலை  செய்கின்ற அனைத்து மக்களுக்காகவும் உயர்வு, தாழ்வு, சாதி, இன, கட்சி பேதங்கள் பாராது செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்படுகிறது.  நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு எல்லா நாட்களிலும் முயற்சிகளை மேற்கொள்கின்ற தொழிலாளர்களுக்கு தற்போது கொரோனாவுக்கும் எதிராகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பிரஜைகளுக்கும் இந்த அனர்த்த நிலையில் தமது வாழ்வை கொண்டு செல்வதற்கு பொருத்தமான பொருளாதார நிலையை உருவாக்கிக் கொடுப்பது அரசாங்கத்தினால் புறந்தள்ளி விடாது மேற்கொள்ள வேண்டிய விடயமாகும். அவர்களுக்காக நன்றிக்கடன் பாராட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த செயற்பாட்டு அரசியல் மயமாக்கல் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும். இதற்காக வேண்டிக் கொள்வதுடன் தாய்நாட்டின் அனைத்து வேலைசெய்யும் மக்களுக்கும் நோய்கள் அற்ற நிலை உருவாக  பிராத்திக்கின்றேன் என அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உலக நாட்டுத் தலைவர்கள் ரமலான் மாத நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்த்துக்களையும் இந்த மாதத்தில் அவர்களுடைய இறைவணக்கமும் பிரார்த்தனைகளும் உலகின் அனைத்து மக்களையும் தொற்றியுள்ள கோவிட் 19 இல் இருந்து உலக மக்களைக் காப்பாற்ற முஸ்லிம்களின் ரமலான் காரணமாக அமையட்டும் என பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்பதே இன்னமும் புரியவில்லை. கிணற்றுத் தவலையாக வாழும் இவர் எப்படி நாட்டுத் தலைவராக நாளைக்குப் பதவி வகிப்பார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.