Header Ads



இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது - பிரதமர்


இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும், எதிரணியினர் உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனையும் பெறமாட்டார்கள் எனவும், அவர்களின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் எக்காரணம் கொண்டும் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மீளக்கூட்டவே மாட்டார் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சியில் கூடுவது உறுதி எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையிடலின்போதே பிரதமர் மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தோல்விகள் எமக்கு நிரந்தரமல்ல. வெற்றிகள்தான் எம்மை முன்னோக்கிக்கொண்டு செல்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமக்குக் கிடைத்த வெற்றி வரலாற்று வெற்றி மாபெரும் வெற்றி. எனவே, பொதுத்தேர்தலிலும் கட்சியிலுள்ள அனைவரினதும் பங்களிப்பு மிகவும் அவசியம்.

அப்போதுதான் நாம் மாபெரும் வெற்றியுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்தலாம். மக்களின் நம்பிக்கையாளர்களாக நாம் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

எதிரணியினரின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் எமது பணி தொடர்கின்றது.

இதில் முப்படையினரினதும் பொலிஸாரினதும் மருத்துவத்துறையினரினதும் சேவைகள் அளப்பரியவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. எல்லாமே குறிப்பிட்ட காலத்துக்கே.....மக்கள் புறிந்து காலம் வரும்போது ஆட்டம் விழங்கும்.

    ReplyDelete
  2. FIR AWN ALSO SAID SAME WORD.
    ALLAH IS THE CONTROLLING THE GLOBE.CORONA IS THE WITNESS FOR THIS.SUPER POWER WHAT HAPPEND TODAY?????????

    ReplyDelete
  3. "இந்த அரசை யாராலும் அசைக்க வும் முடியாது; வீழ்த்தவும் முடியாது" என்ற வீரவசனம் பேசுவதற்கு முன்னால் என்னுடைய ஆட்சியில் சகல மக்களும் சமஅந்தஸ்த்துடன் சுகமாக வாழ்கின்றார்களா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவநம்பிய தீசனுடைய மற்றும் துட்டகாமினியின் ஆட்சிமுறைமை என்று இலங்கைக்கு வரும்???

    Make sure that all people in my regime are living in peace, before the heroic speech of "no one can shake or bring down this state". When will the God-fearing Tissa and Dutu Gemunu ruling system will adopt in Sri Lanka's regime.

    ReplyDelete

Powered by Blogger.