Header Ads



இளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்..? யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி

- Sr. Abbas -

இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன்சங்கர் ராஜா. தனது தாயார் மறைவிற்குப் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லிமாக மாறிய யுவன்சங்கர் ராஜா தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார்.

இதையடுத்து 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் ஷாஃப்ரூன் நிஷார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்களில் பல கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அதில் யுவன்சங்கர் ராஜாவின் மதம் மாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ஷாஃப்ரூன், யுவன்சங்கர் ராஜா இஸ்லாமைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்றத் தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும். அவர் மற்ற மதங்களை விடுத்து இஸ்லாமைத் தேர்ந்தெடுத்தது அது அவருக்கு பிடித்திருந்தது. மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகள் அவருக்கு குரானில் கிடைத்த்திருக்கின்றன. எங்களது திருமணம் இரு குடும்பத்தாராலும் ஏற்பாடு செய்யப்பட்டது தான்.

நாங்கள் எண்ணங்களால் இணைந்திருக்கிறோம். கடந்த காலத்தில் எதிர்கொண்டவை, வாழ்க்கையில் தினம் சில அற்ப வார்த்தை சண்டைகளை விடவும் பெரிய விஷயங்களைப் பற்றிய எங்களுடைய உரையாடல் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம். இஸ்லாத்தை விட முக்கியமான ஒன்றை தேர்ந்தெடுப்பேன் என்றால் நான் அதை விவரிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து யுவன் இஸ்லாமிய உடையில் இருக்கும் போட்டோக்களைப் பகிர்ந்து இப்படி மாற்றி விட்டீர்களே என்று கேட்க, “வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார் யுவனின் மனைவி.

இளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவர் மகனை இப்படி மாற்றிவிட்டீர்களே? என்ற மற்றொரு நெட்டிசனின் கேள்விக்கு பதிலளித்த யுவன்சங்கர்ராஜாவின் மனைவி, “மறுபடியும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. உங்களுக்கு நான் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்கள் எப்படி இவ்வளவு முட்டாள்தனமாக இருக்க முடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

யுவனின் மனதில் விஷத்தைக் கலப்பதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று யுவன் மனைவிக்கு ஒருவர் பதிலளிக்க, யுவனின் மனைவியோ, “மனதில் விஷம் கலப்பது என்றால் என்ன என்று என்னிடம் சொல்லுங்கள். அவர் முஸ்லிமாக மாறிய பின்னர்தான், நான் அவரைச் சந்தித்தேன். அவர் கடந்த 4 ஆண்டுகளாக முஸ்லிமாக இருக்கிறார் என்றார்.

தொடர்ந்து இதேபோல் கேள்விகள் எழுப்பப்படவே இறுதியாக பதிலளித்த ஷாஃப்ரூன் நிஷார், நான் யுவனின் நம்பிக்கை பற்றியும் அவர் ஏன் இஸ்லாமைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றியும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா, அது உங்களுக்கு போதுமா என்று கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.