Header Ads



முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிர‌ச்சினை, ஜ‌னாஸா எரிப்பு ம‌ட்டும்தானா?

- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

முஸ்லிம்க‌ளிட‌ம் ஒரு ப‌ழ‌க்க‌ம் உள்ள‌து. ஒருவ‌ன் ஒன்றைச்செய்தால் எல்லோரும் போளீன் போட்டு அத‌னை செய்வ‌ர்.

ப‌ஸாரில் ஒருவ‌ன் நகைக்க‌டை போட்டால் எல்லோரும் ந‌கைக்க‌டை திற‌ப்ப‌ர். ஒருவ‌ன் பிட‌வைக்க‌டைக்கடை  போட்டால்  எல்லோரும் பிட‌வைக்க‌டைதான் திறப்பர் இப்பழக்கத்தை முஸ்லிம் சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும் என உலமாக்கட்சியின் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கொரோனா முஸ்லிம் ஜனாஸாக்கள். எரிப்பு தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

 கொரோனா ஜ‌னாஸா  எதிர்ப்புக்காக‌ கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ள் சார்பில் இருவ‌ர் வழ‌க்கு போட்ட‌தை தொட‌ர்ந்து இப்போது முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் எல்லோரும் யாராவ‌து ச‌ட்ட‌த்த‌ர‌ணியை பிடித்து அதே விட‌யத்துக்காக‌ வ‌ழ‌க்கு வைக்கிறார்க‌ள்.

ஓரிருவ‌ர் வ‌ழ‌க்கு வைத்தாலும் எல்லோரும் ஒவ்வொருவ‌ராக‌  வைத்தாலும் தீர்ப்பு ஒன்றுதான்.

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிர‌ச்சினை ஜ‌னாஸா எரிப்பு ம‌ட்டும்தானா?

க‌ட‌ந்த‌ ர‌ணில், ச‌ஜித் அரசில் அத்துமீறி வைக்க‌ப்ப‌ட்ட‌ சிலை இன்ன‌மும் அக‌ற்ற‌ப்ப‌ட‌வில்லை.

க‌ட‌ந்த‌ அர‌சில் பொத்துவிலில் அடார்த்தாக‌ முஸ்லிம் ஏழைக‌ளின் காணிக‌ளை பிடித்து ப‌ன்ச‌லைக்கு எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் ச‌ந்தேக‌த்தில் க‌ட‌ந்த‌ அர‌சால் கைதுசெய்ய‌ப்ப‌ட‌ ப‌ல‌ர் இன்ன‌மும் குற்ற‌ம் நிரூபிக்க‌ப்ப‌டாம‌ல் சிறையில் உள்ள‌ன‌ர்.

துப்பாக்கி முணையில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌த்துக்கெதிராக‌ நீதி ந‌ட‌வ‌டிக்கை இல்லை.

கட‌ந்த‌ ஆட்சியில் இஸ்லாம் ச‌ம‌ய‌ ஆசிரிய‌ர்க‌ள் நிய‌ம‌ன‌த்துக்காக‌ வ‌ர்த்த‌மாணி அறிவித்து விண்ண‌ப்ப‌ங்க‌ளும் பெற்ற‌ பின் அந்த‌ நிய‌ம‌ன‌ம் வ‌ர்த்த‌மாணி மூல‌ம் அநியாய‌மாக‌ ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இப்ப‌டி எக்க‌ச்ச‌க்க‌மான‌ பிர‌ச்சினைக‌ள் உள்ள‌ன‌. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவ‌ராக‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ள் மூல‌மாக‌ வ‌ழ‌க்கு போட‌லாம்.

இத‌னை விடுத்து எல்லோரும் ஒன்றுக்குப்பின்னால் இழுப‌டுவ‌து ச‌ரிதானா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

12 comments:

  1. முபாறக் மௌலவி, நீங்களும் எங்களுடைய அரசியல் தலைவர்தானே. வேலை இல்லாமல் விளக்குப் பிடித்துக்கொண்டு சும்மாதானே இருக்கிறீங்க. பார்த்து நீங்களும், முஸ்லிம்கள் சார்பில் இரண்டு மூன்று வழக்குகள் போட்டு உரிமைகளை வென்று தாருங்கள் பார்க்கலாம், சும்மா வியாக்கியானம் சொல்லாமல்.

    ReplyDelete
  2. இந்த காக்காய் பிடிப்பவனெல்லாம் இந்த சமூகத்திற்கு செய்தது என்ன? 20 வாக்குகளாவது வாங்க வக்கிருக்கின்றதா

    ReplyDelete
  3. சரி ஏற்றுக் கொள்வோம். இந்த உலமாக் கட்சி இதுவரையில் இந்த நாட்டில் சாதித்தது என்ன?

    ReplyDelete
  4. நீர் இப்போது ஆளும் கட்சியுடன்தானே இருக்கின்றீர் உன்னால் எல்லாவற்றையும் செய்யமுடியும்தானே மற்றவனை ஏன் குறை கூறுகின்றீர் நீர் ஆரம்பித்தால் மற்றவர் உன் பின்னால் வருவார்கள்

    ReplyDelete
  5. Evar yar plz yaravathu solungal plz

    ReplyDelete
  6. ஏன் பட்டியலிட்டு பத்திரமாக வைத்துக்கொள்ளப் போகின்றீர்களா?

    ReplyDelete
  7. Mama... Why not you file case against to what you have listed. You also from same Muslim society isn't it?

    LET The muslims keep TRUST in ALLAH alone not in Any parties that ruled, ruling or going rule the country.

    LET our politicians fear Allah and serve the community but not the political agenda.

    Leave the Muslim public to decide to who they should give vote based on what they have experienced in the past and today till this burning janaza.

    ReplyDelete
  8. எல்லோரும் அரசியல் செய்வது என்று நீங்களும் அரசியல் செய்கின்றீர்கள், இது உங்களுக்கும் பொருந்தும் அல்லவா, நீங்களும் சிந்தித்து !! உங்கள் உபதேசத்தை நீங்களே பின்பற்றுங்கள்.

    ReplyDelete
  9. நீங்களும் இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம்தானே? இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இன்னது இன்னது என்று இதுவரைக்கும் தெரியாமலா உலமா கட்சி எனும் அரசியல் கட்சி நடத்தி வருகின்றீர்கள்? இந்த லட்சனத்தில் தானா ஏனைய அரசியல் கட்சிகளை விமர்சிக்கின்றீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.