Header Ads



இஸ்ரேல், அமெரிக்காவுடனான பலஸ்தீன ஒப்பந்தங்கள் ரத்து


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பலஸ்தீன ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் (பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உட்பட) முடிவுக்கு வருகின்றன” என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பது குறித்து இஸ்ரேல் முடிவு எடுத்த நிலையில் இந்த அறிவிப்பை பலஸ்தீனம் வெளியிட்டுள்ளது.

பலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பதுதான் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

ஜெரூசலமை இஸ்ரேல் தலைநகராக டிரம்ப் அறிவித்தபோதே, பலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.