Header Ads



சுதந்திரக் கட்சியிலிருந்து, மஹிந்த சமரசிங்க நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க கட்சிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ததன் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மஹிந்த சமரசிங்க கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த சமரசிங்க இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுன சார்பிலேயே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அத்தோடு அவர் கட்சிலிருந்து விலகுவதாகவும் அறவித்திருந்தார்.

அதற்கமைய நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. ஆனால் இரண்டும் வெவ்வேறு கட்சிகளாகும்.

எனவே தான் சுதந்திர கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு ஏனைய கட்சிகளில் இணைந்து செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர். இது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்ட செயற்பாடாகுமென்றும் வீரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.