Header Ads



இலங்கையில் உள்ள இங்கிலாந்து குப்பைகளை, மீள ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை


கடந்த வருடத்தில் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குப்பைகளை மீள ஏற்றுமதி செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த குப்பைகள் இலங்கை துறைமுக வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு குப்பைகளை கொண்டுவந்த விவகாரம் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனமொன்று முன்னெடுத்த நீதிமன்ற நடவடிக்கைக்கு ஏற்ப மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பிற்கிணங்க இந்த குப்பைகளை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த சூழலியல் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களுடன் இராஜதந்திர ரீதியில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அது தொடர்பிலான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இந்த வௌிநாட்டின் கழிவை யார் இலங்கைக்குக் கொண்டுவந்தார், அதனால் அவர் அடைந்த பொருளாதார இலாபம் எவ்வளவு என்பதையும் அந்த நபரின் பெயரையும் அரசாங்கம் தெரிவிக்குமா, அனால் கண்டிப்பாக தெரிவிக்க மாட்டாதுஎன்பது தான் பொதுமக்கள் கருத்து, ஏனெனில் அந்த நபருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பும் உறவும். அப்படியென்றால் அந்த கழிவின் காரணமாக இந்த நாட்டில் ஏற்படும் சுகாதாரச்சீர்கேடு,சூழல் மாற்றம் பொதுமக்களின் வாழ்க்ைகயில் ஏற்படும் கதிர்வீச்சுடன் தொடர்பான புற்றுநோய்கள் போன்ற பயங்கர நோய்கள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு போன்றவிடயங்களை அரசாங்கம் அல்லது பொருப்பு வாய்ந்த அமைப்பு பொதுமக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.