Header Ads



விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புக்கு, பாதுகாப்பு செயலாளர் பாராட்டு


இலங்கையின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவருவது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண கருத்து தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தினையும் போதைப்பொருள் மாபியாக்கள் போன்றவர்களின் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்துவதில் விசேட அதிரடிப்படையினர் முக்கிய பங்களிப்பு அவசியமாகவுள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட அதிரடிப்படையினர் வழங்கிய பங்களிப்பை பாராட்டியுள்ள அவர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும்போதைப்பொருட்களை கைப்பற்றுவது போன்ற விடயங்களில் விசேட அதிரடிப்படையினர் தங்களின் தொழில்சார் திறமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளிற்கு மாத்திரமல்லாமல் திட்டமிட்ட குற்றச்செயல்களிற்கு எதிராக பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரின் தேவை அதிகமாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியின் போது தனித்து செயற்பட்ட தனித்து செயற்பட்ட புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு செயலாளர் தேசிய பாதுகாப்பினை பேணுவதற்காக புலனாய்வு பிரிவினருக்குடி புத்துயுர் கொடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இது இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.