Header Ads



பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானி, அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு அடிப்படை உரிமை மனு

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் சட்டத்தரணிகள், உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை இன்று -08- தாக்கல் செய்தனர்.

கடந்த 6 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 11, 13 அல்லது 14 ஆகிய மூன்று நாட்களில் ஒரு தினத்தில், பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி, இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலையும், பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலையும் செல்லுபடியற்றதாக்குமாறு குறித்த அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.