Header Ads



மேலதிக சட்டமா அதிபராக, பர்ஹானா ஜெமீல் நியமனம்

- Navamani -

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சட்டமா அதிபராக திருமதி பர்ஹானா ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியான இவர், 1988ஆம் ஆண்டு சட்டத்தரணியாக நீதித்துறையில் இணைந்து கொண்டார்.

1990இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்த  இவர், பிரதி சொலிஸ்டர் ஜென்ரலாகவும் பதவி வகித்தார். இப்போது இவர் மேலதிக சட்டமா அதிபராக நியமனம் பெற்று பதவியேற்றுள்ளார்.

இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பாஹிம் ஜெமீலின் துணைவியான இவர், கல்முனை காரியப்பர் குடும்பத்தைச் மர்ஹூம் சட்டத்தரணி அமீன் யூசுப் தம்பதிகளின் மகளும் மறைந்த நீதியரசர் ஜெமீலின் மருமகளும் ஆவார்

1 comment:

  1. ​மேலதிக சட்டமா அதிபர் என்ற ஒரு பதவி இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இல்லை. மேலதிக மன்றாடியார் அதிபர்/அதிபதி அல்லது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் என பதவிப் பெயர் திருத்தப்படல் வேண்டும்.

    There is no Additional Attorney General post in AG's department in Sri Lanka and it should be corrected as Additional Solicitor General

    ReplyDelete

Powered by Blogger.