May 03, 2020

தற்போதைய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் 14 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மது பாவனையே முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாடிவீட்டு தொகுதிகளில் வசிப்பவர்கள் வைரஸ் தொற்று தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


வெளிப் பிரதேசங்களிலுள்ள நபர்கள் தமது பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதை மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வருபவரை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குசட்டத்தை மீறுவோரை கண்காணிப்பதற்காக நாட்டில் 110 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் 14 பேர் மது பாவனைக்கு அடிமையானவர்கள். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மது பாவனையே.

அதற்கிணங்க சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிலைமையே அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனூடாகவே வைரஸ் தொற்று கிளைகள்உருவானது.

அரசாங்க புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கிணங்க இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இனங்காணப்பட்டதிலிருந்து இதுவரை 31 கிளைகள் மூலமே வைரஸ் தொற்று உருவாகியுள்ளது.

இதுவரை அதில் 27 கிளைகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்கு கிளை களம் உள்ளதுடன் அதில் மூன்று கிளைகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போதைய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

1 கருத்துரைகள்:

கொரணா தடுப்பு என்பது மிகவும் முக்கியமான விடயம். இப்ப அதனை ஒரு பக்கம் வையுங்கள். இப்போது எங்கள் நாட்டிற்கு முன்மாதிரியான அரசியல் தலைவரகளும் அரச ஊழியர்களும் சிறப்பாக குற்றத் தடுப்பு அதிகாரிகளும் கிடைத்துள்ளனர். இவரகளது சேவைளை தற்போது நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். நாட்டில் குற்றச் செயல்களை ஒழிப்பது என்பது மிகவும் இலகுவான செயல். அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. மது பாவனை போதைப் பொருள் பாவனை என நாடு முழுவதும் குற்றச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் நாட்டிற்கே பெரும் நஷ்டம் என்பதுடன் பொது மக்களுடைய நல்வாழ்விற்கும் கேடாகி விடுகின்றது. தேவையற்ற செலவுகளை குறைப்பதனால் மக்கள் நலத் திட்டங்களை நல்ல முறையில் அபிவிருத்தி செய்ய முடியும். சட்ட விரோதமான வருவாயைக் கொண்டுதான் நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. மக்களுக்கு தொழில் வழங்குவதன் ழுலமும் நல்ல வருவாய்களை அதிகரிப்பதன் மூலமும் நாட்டை அபிவிருத்தி செய்ய அரசு முயறசிக்க வேண்டும். எத்தகைய போதைப் பொருள்களினாலும் நாட்டிற்கு வருமானம் இல்லை. அதனால் அரசுக்குத்தான் அதிக அளவு செலவு மக்களின் வரிப் பணமும் தேவையில்லாமல் செலவிடப்படுகின்றது. மக்களுக்காகத்தான் அரசு அரசுக்காக மக்கள் அல்ல என்ற சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு மிக அதிகளவில் முயற்சிக்க வேண்டும்.
Coronavirus prevention is a very important issue. Put it a side now. Our country now has exemplary political leaders, civil servants and specially criminal officers. We are currently looking at their invaluable services. Eliminating crime in the country is a very easy process. It doesn't need to be too much trouble. The use of drug in any form is a crime across the country. This is a great loss to the country and a detriment to the welfare of the public. Reducing unnecessary expenditure can help people to develop better programs. Nowhere is it said that the country should be enriched with illegal revenue. The Government should strive to develop the country by providing employments to the people and increasing good incomes. The country has no income from any drugs. That is why the government is spending so much money on people's tax money. The government should do its utmost to implement the ideology that the state is not for the people but for the people.

Post a Comment