May 27, 2020

வெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...!!

படையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று செய்திகள் சொல்கிறது.

#அல்லாஹ் தன் #வேதத்தில்_கூறுகின்றான்...

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், #வெட்டுக்கிளியையும் பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து #குற்றம்_புரியும் #சமூகத்தாராகவே_ஆகியிருந்தனர்.

#அல்குர்ஆன் : 7:133)

#வெட்டுக்கிளியின் அசுர வேகத்தில் பல ஏக்கர் விவசாயத்தை அழித்துவிடுமாம்.

குறிப்பாக அமெரிக்கா நாடுகளில் காணப்படும் சில வகை வெட்டுக்கிளி இனங்கள், தொடர்ந்து 13 வருடங்கள் மண்ணில் புதையுண்டு மரண நிலையில் வாழ்ந்து வரும். இதில் வேறு ஒரு இன வெட்டுக்கிளிகள். 17 வருடங்கள் மண்ணுக்குள்ளேயே முட்டையுடன் அடங்கிக் கிடக்கும். சரியாக 13 வருடங்கள் முடிந்து பதினாலாம் வருடத்தில்…அல்லது 17 வருடம் முடிந்து பதினெட்டாவது வருடத்தில்தான் மண்ணுக்கு மேல் வெளி வந்து பறந்து திரியும். இந்த வெட்டுக்கிளி இனத்திற்குப் பெயர். ( Periodical cicadas.Magiccicada is the genus of the 13 years and 17 year )

பதினேழு வருடங்கள் மண்ணுக்குள் மரண நிலையில் இருந்த இந்தவெட்டுக்கிளிகள் கடைசியாக 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தென்பட்டது. இனி அதன் மரண மயக்கம் தெளிந்து விழித்து எழுவது 2024 ஆம் வருடமே! அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு.இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும் நம் கண்முன்னே நடக்கும் காட்சியாக உள்ளது.

பனிரென்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல் 17 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணறையிலிருந்து மேல் வரும் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவைகளின் உலக வாழ்வு ஐந்து வாரங்கள் மட்டுமே! அதற்குள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு அதை மண்ணறையில் வைத்து தன் வாழ்வை முடித்து விடும். இந்த முட்டைகள் மீண்டும் வெட்டுக்கிளிகளாக வெளியுலகம் வருவதற்கு அடுத்த 13 அல்லது 17 வருடங்கள் மண்ணறை கப்ர்ஸ்தானிலேயே உறங்க வேண்டும். மரித்த மனிதர்கள் புதை குழியிலிருந்து வருவதற்கு உதாரணமாக அல்லாஹ் வெட்டுக்கிளியை உதாரணம் காட்டியதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம்.அல்லாஹ்வே அறிந்தவன்.

#தாழ்ந்து_பணிந்து_ கீழ்நோக்கிய #பார்வையுடன் #அவர்கள்_புதை_ குழிகளிலிருந்து_பரவிச்_செல்லும்_வெட்டுக்கிளிகளைப்_போல்_வெளியேறுவார்கள்.
#அல்குர்ஆன் : 54:7)

"(எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.

#அல்குர்ஆன் : 10:24)


நம் அனைவரையும் #இறைவன்_பாதுகாப்பானாக...

1 கருத்துரைகள்:

Post a comment