Header Ads



பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள அறிக்கை

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் .

வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் இராணுவம் மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கிய ஒத்துழைப்பினை நாடு வழமைக்கு திரும்புவதற்கும் வழங்க வேண்டும். ஆகவே அனைவரும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் முழு உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சர்வதேச போக்குவரத்தினை தடை செய்ய வேண்டிய தேவை கிடையாது என்ற நிலைப்பாட்டினையே உலக சுகாதார தாபனம் 2020. பெப்ரவரி மாதம் 29ம் திகதி வரை கொண்டிருந்தது. பாதுகாப்பு முக்கவசம், சமுக தொடர்பு இடைவெளி ஆகியவற்றை பேண வேண்டும் .என உலக சுகாதார தாபனம் ஏப்ரல் 6ம் திகதி குறிப்பிட்டது. இந்த வைரஸ் தாக்கம் அனைத்து நாடுகளுக்கும் புதியதொரு அனுபவம்.

கொரோனா வைரஸ்  இலங்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.கொரோனா ஓழிப்பு, பாதுகாப்பு செயலணியை ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி நிறுவினார் .

நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளப்படுத்தாத வேளையில்  கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி மருத்துவ கண்காணிப்பு  இதனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டன.

மார்ச் மாதம் 10 ம் திகதி நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டார்.அதே மாதம் 11ம் திகதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணமானது.

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளானவரை அடையாளம் காணவும் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவும் ஆரம்பத்தில் இருந்து சுகாதார தரப்பினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்த நடவடிக்கையினால் நிலைமையினை எதிர்பார்க்கப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நாடுகள் இலங்கை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது என்பதை பெருமித்த்துடன் குறிப்பிட வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் வாழ்ந்த 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார்கள்.ஆனால்  இலங்கையில் இதுவரையில் 9 பேர் மாத்திரமே இறந்துள்ளார்கள்.என்பதை குறிப்பிட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச தெரிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் இவ்வாறான வெற்றிகளை பெற முடியாமல் போயிருக்கும்.

ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்திய போது முழு நாட்டையும் முடக்குமாறு குறிப்பிட்டார்கள்.உலகில் எந்த நாடும் ஆரம்பத்தில் நாட்டை முழுமையாக முடக்கவில்லை.

 முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் இருந்து சுகாதார சேவையாளர்கள்இ இராணுவத்தினர், பொலிஸார்  மற்றும் விவசாயிகள் தங்களின் நாளாந்த சேவையில் ஈடுப்பட்டார்கள். தற்போது நிலைமை எதிர்பார்க்கப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில்  பொதுமக்கள்  செயற்பட்ட விதம் தவறானது.அரச தனியார் துறையில் தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களை கொண்டு சேவை நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படுகின்றன.பாடசாலை மூடப்பட்டு மேலதிக வகுப்பு நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்ட விதத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இவை  இன்னும் ஒரு சில நாட்களுக்கு செயற்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸை அடையாளப்படுத்தும் பி்.சி. ஆர் பரிசோதனைகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்றாளர் தொடர்ந்து அடையாளப்படுத்தப்படலால்.இருப்பினும் சவால்களை வெற்றிக் கொள்ளும்  பலம் சுகாதார தரப்பினருக்கு என்ற நம்பிக்கை உள்ளது.

தேவையாயின் எதிர்காலத்தில் பிரதேசங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படலாம்.வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து  பொறுப்புடன் செயற்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவான பிரித்தானியாஇஇத்தாலிஇ பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் மீண்டும் வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கும்இபாதுகாப்பினருக்கும் வழங்கிய ஒத்துழைப்பினை நாடு வழமை நிலைமைக்கு திரும்புவதற்கும் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதே தவிர முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். சுகாதார இபாதுகாப்பு தரப்பினரது அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.