Header Ads



பள்ளி மோதினார் பேசுகிறேன்...


மோதினார் தானே என்று 
மொத்தமாய் ஒதுக்கி விடாமல்
கொஞ்சம் காது கொடுங்கள் 
கெஞ்சிக் கேட்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன் 
பள்ளிமோதினாய் 
பதவியேற்றேன் இப்பொழுதுதான் போலுள்ளது இத்தனை வருடங்களும் கடந்துபோனது
இத்தனை வருடங்களுக்குள் 
எத்தனை எத்தனை மாற்றங்கள்.

பள்ளிவாசலில்
பள்ளி இமாம்கள் பலபேர்மாற,
பள்ளிக் கட்டிடங்களும் மாடிகளாக,
வருமானங்களும் பல்லாயிரமாக,
மாற்றங்கள் ஏராளம் ஏராளம்
மாறாதவைகளுமுண்டு சொல்கிறேன் 
மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

என் மாத சம்பளம்,
என் கந்தலாடைகள்,
இறந்து இத்துப் போன என் சைக்கிள்
ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துள் 
ஐவர் வாழும் துர்ப்பாக்கியம்
என் குடும்பத்துள்
வயிறார உண்ணவும் 
வாய்க்கு ருசியாக
ஏதும் வாங்கவும் 
பாக்கியமற்றவர் நாங்கள்.

மோதினார் தொழிலென்றால் 
அத்துனை மோசமா?
மேசனின் நாட்கூலி,
மீனவனின் வாரத்து வருமானம்,
கொத்து ரொட்டிக்காரனின் 
ஒரு வேளைக்கூலி,
இத்தனையையும் விட என் பணி
மட்டமா?

நாளுக்கைந்து வேளை அதான் சொல்கிறேன்
நாள் தவறாமல் பள்ளியும் கூட்டுகிறேன்
ஹவ்ள் நிறைய நீரும் நிரப்புகிறேன்
கஷ்டமென்று ஒருபோதும் நினைத்ததில்லை
கடமைக்கு மேலால் கக்கூசும் கழுவுகிறேன் வெள்ளிக் கிழமை வந்தால் வேலைகளோ அதிகம்.

மரண வீடென்றால் 
மறக்காமல் அழைப்பு வரும் 
கல்யாண வீடென்றால் கொஞ்சம் கஷ்டம்தான், மறதியென்று மன்னித்து விடுவேன்.

மழை, வெயில்
இடி மின்னல்
எதுவும் பார்க்காமல் என் பணியை இனிதே செய்கிறேன் இத்தனை வருடங்களாய்.

மின் குமிழ் எரியாவிட்டால், 
மாபிளை மினுக்க மறந்தால்,
சுற்றும் விசிறி சுழல மறுத்தால்,
சட்டம் மட்டும் பேசுபவர்களே
என் சட்டைப்பையை பார்த்ததுண்டா?

மனைவிக்கு மருந்து வாங்க பணமில்லை
மகளுக்கு மனமுடிக்க வக்கில்லை
நாலுபேருக்கு மத்தியில் நல்ல சட்டை போட நாதியில்லை
இத்தனையையும் நெஞ்சில் சுமந்து
எப்படியய்யா இதமாய் பாங்கு சொல்ல?

இன்னும் ஓரிரு வருடங்களில் 
என் பணி முடிகிறது
கையில் எதுவுமற்றவனாய்
எங்கோ ஓர் மூலையில் முகட்டை வெறித்துப் பார்ததபடி கிடப்பேன்
வேதனைகளை மட்டும் சுமந்து.

நோன்பு காலம் என்னையும் கொஞ்சம் பார்த்து கவனியுங்கள்!

இப்படிக்கு 
மோதினார்
உங்க ஏரியா பள்ளி.

படித்ததில் பிடித்தது♥️

3 comments:

  1. படைத்தவனை அஞ்சிக்கொள்ளுங்கள் உங்கள் ஈமான் பலவீனம் அல்லாஹ்விடம் உருதியான ஈமானோடு கேளுங்கள் அல்லாஹ் யாருக்கும் அனியாயம் செய்பவன் அல்ல நீங்கள் நேர்மையாகவும் உருதியாகவும் இருப்பீர்களேயானால் நிச்சயமா சத்தியமா அந்த ரப்பு உங்களை கைவிடமாட்டான் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் உங்கள் சம்பளம் 2000/- ரூபாவாக இருந்தாலும் படைத்த அந்த ரப்பு மீது உருதியான உண்மையான நேர்மையான நம்பிக்கை இருக்குமேயானால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் பரக்கத்தை ஏற்படுத்துவான் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.... நிச்சயம் வெற்றி கிடைக்கும்....

    ReplyDelete
  2. Very fact description. Best wishes

    ReplyDelete
  3. மேலே சகோ.சுபைர் கூறியது சரி என்று ஒரு பக்கம் இருக்க பரவலாக எல்லாப் பள்ளிவாயல் நிருவாகமும் இவர்கள் விடயத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள் நிருவாக்தில் உள்ளோர் சிந்திக்கவும் வேண்டும் இதைப்பற்றி பேச முஅத்தீன்களும் வெட்கப்படக்கூடும்

    ReplyDelete

Powered by Blogger.