Header Ads



கொரோனா மரணங்களை அரசியலாக்காதீர்கள் - சத்தார்

கொரோனாவால் ஏற்படும் மரணங்களை, அரசியலாக்க வேண்டாமென பொதுஜன பெரமுனவின் அரசியல் முக்கியஸ்தர் சத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், மேலும் குறிப்பிட்டதாவது,

உலகம் பூராகவும் கொரோனாவால் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அது இலங்கைக்கு விதி விலக்கல்ல. இந்த புனித ரமழான் காலத்தில் நாம் அல்லாஹ்விடம் இரு கரமேந்துவோம்.

இந்த கொடிய நோய் இலங்கையிலிருந்து மாத்திரமல்ல முழு உலகிலிருந்தும் இல்லாமலாக்க எமக்கு பிரார்த்தனையைத் தவிர வேறு எதுவும் இல்லை. முஸ்லிம்களின் மிகப் பிரதான ஆயுதம் துஆதான். அந்த அடிப்படையில் நாமும் துஆ செய்வோம்.

கலா கத்ர் என்பதில் முஸ்லிம்களாகிய நாம் நம்பிக்கை கொண்டவர்கள்.

இதுபோன்று நாட்டு நடைமுறைகள், சட்ட திட்டங்கள், சுகாதார விதிமுறைகள் போன்றவற்றுக்கும் நாம் கட்டுப்பட்டு செயற்படுவோம். ஜனாஸாக்களை வைத்து அரசியல் செய்வது நாகரீகமல்ல. சமூக ஊடகங்களில் வந்து தம்மை வீரர்களாக காட்டுவதை விடுத்து முஸ்லிம் சமூகத்திற்கு நல்லது நடக்க பிரார்த்திப்போம் என்றார்.

2 comments:

  1. முதலில் உங்கள் தலைவரை WHO இன் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற சொல்லுங்கள்.Corona மணரங்களை வைத்து அரசியல் செய்வது முஸ்லிம்களல்ல, பேரினவாதிகளும் அதட்க்கு வக்காலத்து வாங்கும் அல்லக்கைகளுமே!

    ReplyDelete
  2. நீங்களும் ஊடகத்தில் அறிக்கை விடாமல் பேச வேண்டிய இடத்தில் பேசினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.