Header Ads



கொரோனா வைரஸிலிருந்து விரைவாக மீண்டுவரும் இலங்கை

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸிலிருந்து இலங்கை விரைவாக மீண்டுவருவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் 23 கொரோனா நோயாளர்கள் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 494 ஆக குறைந்துள்ளது.

இதில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இராணுவத்தினர் அல்லாத சிவில் மக்களின் எண்ணிக்கை 108 என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான கடற் சிப்பாய்கள் 413 பேர் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடற்படையின் கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நாட்டினை மீளவும் திறந்து இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் அனைவரும் இதற்கு முன்னர் மிகவும் சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்படுவது மிகவும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

இயல்வு வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது மீண்டும் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர் முழுமையாக கொரோனா ஆபத்து இல்லாமல் போகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்புகளை முழுமையாக பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்வரும் 2,3 வாரங்களுக்குள் சாதாரண வாழ்க்கையை வாழ கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 869 பேர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.