Header Ads



பிரித்தானியாவுக்கு அவசர மருத்துவ உபகரணங்கள் - துபாய் உத்தரவு

பிரித்தானியாவுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்க துபாய் அரசர் உத்தரவிட்டுள்ளார்.

துபாய் அரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியுமான Sheikh Mohammed Bin Rashid Al Maktoum, கொரோனா பரவலைத் தடுக்க உதவுவதற்காக,

பிரித்தானியாவுக்கு அவசர மருத்துவ உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார் அந்த மருத்துவ உபகரணங்களில், மாஸ்குகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் உட்பட 60 டன் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளடங்கும்.

இந்த சம்பவம், கொரோனாவால் அவதியுறும் நட்பு நாடுகளுக்கு உதவ விரும்பும் அரசரின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.