Header Ads



மாளிகாவத்தையை புரிந்து கொள்ளுங்கள்...!


மாளிகாவத்தை நிலைமை பற்றி 3 வாரங்களுக்கு முன்பே அங்கு சென்று நேரடியாக மக்கள் படும் அவதிகளை கண்டேன். 

அப்பிரதேசம் இறுக்கமானதும் முடுக்கு குடியிருப்புக்கள், நிறையவே உள்ளன. 

மாளிகாவத்தை வீதிகளிலும் இரு மருங்குகளிலும் சிறிய கடைகள் பாதையோர வியாபாரம். ஒரு தொடா்மாடியில் 2 அல்லது குடும்பங்கள் குடிவாழ்கின்றனா் , இளைஞா்கள் தொழில்செய்வோா் அதிகமாக போதைப் பொருள் பாவனையாளா்கள் பாதைகளில் காணக்கூடியதாக உள்ளது., 

சில பெண்கள் அபான்ஸ் கிளினீங் தொழில் செய்து ஒரு நாளைக்கு 800 சம்பளம் பெறுவதாகச் சொன்னாா்கள் கடந்த லொக் டவுன் காரமாக 1 மாதமாக தொழில் இல்லை என பல தாய் மாா்கள் கூறினாா்கள். பல குடும்பங்களின் குடும்பத் தலைவா்கள் தொழியின்மை போன்ற பல்வேறு பிரசசினைகள் அங்கு உள்ளன. 

கடந்த 3 வாரங்களுக்கு முன் 1500 பெருமதியான உலா் உணவுப் பாா்சல் வழங்கிய அன்வா்பாய் கூட 5 பொலிஸாரை வரவழைத்து அவா்கள் முன் மக்களை வரிசையாக நிற்க வைத்து 3 தொண்டா்கள் ஊடாக உலா் உணவு காட் வழங்கி உணவுப் பொதிகளை வழங்கினாா் 

அந் நேரத்திலும் நுாற்றுக்கணக்கானோா் காா்ட் இல்லாமல் வந்தவா்களை அந்த அன்வா் பாய் தரமுடியாது நாங்கள் 300 காா்ட் வழங்கினோம் பொருட்கள் முடிந்து விட்டது எனச் கூறி அந்த தாய்மாா்களை திரும்ப வீடுகளுக்கு அனுப்பினாா். 

இந்த பாய் முறையாக பொலிஸ் அனுமதி பெற்று அவா்களை வரவழைத்து முறையாக தமது உதவிகளை செய்திருந்தாா்.

Ashraff A Samad

1 comment:

  1. வீடு,கடை, பள்ளி, ஜனாசா என ஆரம்பித்து இப்போது வறுமையால் உயிரிழந்த சமூகமாகவும் ஆகிவிட்டோம்। எமது சமூகத்தின் தேவைகள், அபிலாஷைகள் நிறைவேற, ஒரு புதிய பொறிமுறை காலத்தின் கட்டாய தேவை।

    நம்பிக்கை கொண்டோரே, சிந்தியுங்கள்। நீங்கள் சிந்திக்கவில்லையென்றால், மிருகங்களை போன்டர்வர்கள்। இல்லை அதைவிடக் கேவலமானவர்கள்। (Al Quran

    ReplyDelete

Powered by Blogger.