Header Ads



கட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)

- Anzir -

இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்தானார். 

இவருக்கு அடுத்த மாதம் 30 ஆம் திகதி, இலங்கையில் திருமணம்கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர் மாரடைப்பினாலே மரணித்தார் என மிகத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. கட்டார் அரசினால் இவர் மாரடைப்பினாலே மரணித்தார் என மரண அத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டாரில் செயற்படும் Sri lankan Community Welfare Federation {CWF-QATAR} அமைப்பின் தலைவர் அக்ரமும், இதை jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

அக்ரம் இதுபற்றி மேலும் கூறியதாவது,

வபாத்தானவர் பற்றி போலியான தகவல் பரப்பப்படுவதாக நாமும் அறிந்தோம். குறித்த மையத்தை நாங்கள் நேரில் சென்று பார்த்தோம். இறுதிவரை அதற்கான பணிகளில் பங்கேற்றோம். வபாத்தானவரின் உறவினரில் ஒருவர்கூட, எங்களுடன் இருந்தார்.

வைத்திய அறிக்கை, வேலைசெய்த கம்பனி, அவருடன் இருந்த நண்பர்கள் என சகலரும் முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார், மாரடைப்பினாலே மரணித்தார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

நிலைமை இப்படியிருக்க, வபாத்தானவர் கேம் விளையாடி, கண், வாய், மூக்கினால்  இரத்தம் வடிந்து மௌத்தானதாக பொய்யை பரப்பியுள்ளனர். 

இது தவறு. இதுபோன்ற  கதைகள் வபாத்தானவரின் குடும்பத்தை எப்படி வேதனைப்படுத்துமென சிந்தித்துப் பாருங்கள். தயவுசெய்து போலியான, அதாரமற்ற வட்சப் தகவல்களை, நம்பாதீர்கள் என்றார் அக்ரம்.








No comments

Powered by Blogger.