Header Ads



கொரோனாவுக்காக எவரையும், பணிகளில் இருந்து நிறுத்தக் கூடாது - பசில் கண்டிப்பான உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில் எவரும் தொழில்களில் இடைநிறுத்தப்படக்கூடாது என்று கோரியுள்ளார்.

ஜனாதிபதி செயலணி புதிய வர்த்தக முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். ஏற்கனவே பாரிய, மத்திய மற்றும் சிறிய வர்ததகங்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உரிய ஒழுங்கு விதிகளின்படி தனியார்துறையினர் எதிர்வரும் 11ஆம் திகதியன்று தமது பணிகளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அமெரிக்கன் ஒருவர் இலங்கையின் தனியார் கம்பனிகள், நிறுவனங்களுக்கு எவ்வாறு உத்தரவிட முடியும் என்பது நாட்டுச் சட்டங்கள் தெரிந்த எவராவது விளக்கிக் கூறினால் எமக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.