Header Ads



ஸ்பெயினில் மீண்டும் அதிகரித்த மரணங்கள் - அவசரநிலையை நீட்டிக்க பிரதமர் கோரிக்கை


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயினில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையிலிருந்து முதல்முறையாக 200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளது தற்போது தான் ஸ்பெயினில் பதிவாகியுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயினில் 25,857 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்று 2 லட்சத்து, 20 ஆயிரத்தி, 325 பேருக்கு (2,20, 325) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் புதிதாக 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்பெயினில் மேலும் சில வாரங்களுக்கு அவசரநிலையை நீட்டிக்க அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரியுள்ளார்.

bbc

No comments

Powered by Blogger.