Header Ads



ஒரு நாளாவது வீட்டிலே, இப்தார் செய்வதன் இன்பம்


இட்லிப் மாநில நகர்களில் ஒன்று தான் அரிஹா. சென்ற வருடம் இரஷ்ய-சிரிய அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்நகரை விட்டு வெளியேறினர். 

அதில் அபூ ஸைத் குடும்பமும் அடங்கும். தனது குடும்பத்துடன் மீண்டும் அரிஹா நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். கடந்த மாதத்தில் வந்த அவர் தங்குவதற்கு ஏதுவாக ஓர் இடத்தை தேர்வு செய்து வசித்து வருகிறார். 

ஆனாலும் இவ்வருட ரமழானின் ஒரு இஃப்தாரையாவது தங்களின் சொந்த வீட்டில் கழித்திட ஆர்வம் கொண்டுள்ளார். போரினால் தகர்க்கப்பட்ட கட்டிட இடிபாடுகளுன் காணப்பட்ட சொந்த வீட்டின் மேல்தளத்தை சுத்தம் செய்து இஃப்தாரை நிறைவேற்றியது அக்குடும்பம். 

"அந்த கடுமையான வலிமிகுந்த நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் வெளியேறி வருகிறோம். இதுபோன்றதொரு அனுபவம் வேறு எவருக்கும் நேர்ந்திட கூடாது என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்கிறார் அபூ ஸைத். 

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அபூ ஸைத் "ஒவ்வொரு வருடமும் இங்கு தான் ரமழானை கழிப்போம். இப்போது ஒரு நாளாவது இங்கே கழித்திட நினைக்கிறோம்" என தன் குடும்ப ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

- அபு ஷாமில்

No comments

Powered by Blogger.