Header Ads



சீனாவிற்கு எதிரான உணர்வு அதிகரிக்கின்றது, அமெரிக்காவுடன் மோதலும் சாத்தியம் – சீனாவின் உள்ளக அறிக்கை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிற்கு எதிரான உணர்வு அதிகரிக்கின்றது இதன் காரணமாக அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்து மோதல் நிலையை நோக்கி நகரலாம் என சீனாவின் உள்ளக அறிக்கையொன்று எச்சரித்துள்ளதாக ரொய்ட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது.

சீனாவின் புலனாய்வு அமைப்பு இந்த அறிக்கையை சீன ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களிற்கு வழங்கியுள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையில் சீனாவிற்கு எதிரான உணர்வு 1989 தினமென் சதுக்க படுகொலைக்கு பின்னர் முதல்முறையாக மிகவும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, சீனா அமெரிக்கா தலைமையிலான நாடுகளிடமிருந்து சீனாவிற்கு எதிரான உணர்வினை எதிர்கொள்கின்றது,என குறிப்பிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா அமெரிக்காவுடனான ஆயுதமோதலை எதிர்கொள்வதற்கு தயாராகவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிந்து அறிந்தவர்கள் தெரிவித்தனர் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் தற்கால உறவுகளிற்கான சர்வதேச நிறுவகம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சீனாவின் முக்கிய புலனாய்வு அமைப்புடன் தொடர்புள்ள அமைப்பு இது என குறிப்பிட்டுள்ளது.

ரொய்ட்டர் செய்தி சேவை இந்த ஆவணத்தை பார்க்கவில்லை எனினும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பார்த்தவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர் என ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிற்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பலை காரணமாக சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாக கொண்ட உள்கட்டமைப்பு திட்டங்களிற்கு பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தனது பிராந்திய சகாக்களிற்கு நிதி உதவியையும்,இராணுவ உதவியையும் அதிகரிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.இதன் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்புநிலை நிலையற்றதாக மாறலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை குறித்துகேள்வி எழுப்பியவேளை தனக்கு இது குறித்து தெரியாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்தார் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Rajeevan Arasaratnam

No comments

Powered by Blogger.