Header Ads



உலக சுகாதார மையம், சீனா என்ன சொன்னதோ, அதை அப்படியே வாந்தி எடுத்துள்ளது

கொரோனா கொள்ளைநோய் பரவலின்போது சீனாவுடன் ஒத்துப்போன உலக சுகாதார மையத்தை மீண்டும் தாக்கிப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா முட்டாள்தனமாக அதற்கு நிதியுதவி செய்துவந்துள்ளது என சாடியுள்ளார்.

உலக சுகாதார மையம் ஒரு பேரழிவாகத்தான் இருந்துவந்துள்ளது, அவர்கள் சொன்னதெல்லாம் பொய்தான், அவர்கள் சீனாவை ஆதரிப்பவர்கள் என்று வரிசையாக கொட்டித் தீர்த்துள்ளார் ட்ரம்ப்.

அவர்கள் செய்வதெல்லாம் சீனா என்னவெல்லாம் விரும்புகிறதோ அவற்றுடன் ஒத்துப்போவதுதான்.

அமெரிக்காதான், முட்டாள்தனமாக, ஆண்டொன்றிற்கு 450 மில்லியன் டொலர்களை உலக சுகாதார மையத்திற்கு வாரி வழங்கி வந்திருக்கிறது. அதே நேரத்தில், சீனா வெறும் 38 மில்லியன் டொலர்களை மட்டுமே வழங்கியுள்ளது.

உலக சுகாதார மையம், சீனா என்ன சொன்னதோ, அதை அப்படியே கொஞ்சம் கூட யோசிக்காமல் வாந்தி எடுத்துள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார் டரம்ப்.

No comments

Powered by Blogger.