Header Ads



டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த “கிறுக்குத்தனமான மிருகம்” கண்டுபிடிப்பு


டைனோசர்களின் காலத்தில், இந்தியாவையும் ஆஃப்பிரிக்காவையும் உள்ளடக்கிய கோண்ட்வானாவில் கண்டறியப்பட்ட இது, மிகவும் முழுமையான மற்றும் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்ட பாலூட்டியாகும்.

டைனோசர்களின் காலத்தில், இந்தியாவையும் ஆஃப்பிரிக்காவையும் உள்ளடக்கிய கோண்ட்வானாவில் கண்டறியப்பட்ட இது, மிகவும் முழுமையான மற்றும் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்ட பாலூட்டியாகும்.

“கிறுக்குத்தனமான மிருகம்” என்று அழைக்கப்படும் பூனை அளவுடைய பாலூட்டி ஒன்று பூமியில் வாழ்ந்த கடைசி டைனோசர்களுடன் மடகாஸ்கரில் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அந்த விலங்கின் புதை படிமத்தை ஆராய்ந்ததில் இதுகுறித்து தெரியவந்துள்ளதாக நேச்சர் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலூட்டிகளின் பரிணாம வரலாற்றுப்படி, 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எலிகளை ஒத்த அளவே பாலூட்டிகள் இருந்ததாக இதுவரை நம்பப்பட்டு வந்தது.

தாங்கள் ஆராய்ந்த அந்த விலங்கு அதன் இறப்பின்போது முழு வளர்ச்சியை அடையவில்லை, ஆனால் அப்போதே அது மூன்று கிலோ எடை கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடலாத்தேரியம் ஹுய் என்று அழைக்கப்படும் பேட்ஜர் போன்ற இந்த உயிரினம் பள்ளம் தோண்டி அதற்குள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பொதுவாக பள்ளம் தோண்டும் குணாதிசயம் கொண்ட விலங்குகளில் காணப்படும் அதிக உணர்திறன் கொண்ட நரம்பு தொகுப்பு இதன் மூக்குப் பகுதியிலும் காணப்படுகிறது.

பாலூட்டிகள் பூமியைக் கைப்பற்றுவதற்கு முன்பு, அவை பூமியை ஆண்ட மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து ஓடி மறைய வேண்டியிருந்தது.

டைனோசர்களின் காலத்தில், இந்தியாவையும் ஆஃப்பிரிக்காவையும் உள்ளடக்கிய கோண்ட்வானாவில் கண்டறியப்பட்ட இது, மிகவும் முழுமையான மற்றும் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்ட பாலூட்டியாகும்.

ஆனால், இந்த வகை பாலூட்டி உயிருடன் இருக்கும்போதே கோண்ட்வானா பிளவுற்று, இன்றைய மடகாஸ்கர் தனித்தீவாக உருவானது.

இந்த வகை பாலூட்டியை பல்வேறு வகையான விலங்குகள் வேட்டையாடி இருந்திருக்கலாம் என்றும், அதே சமயத்தில் மடகாஸ்கரில் இருந்த பல்வேறுபட்ட உணவு ஆதாரங்கள் இவை பெரியதாக வளர வழிவகுத்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"அடலாத்தேரியம்" என்ற பெயர் மலகாஸி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு "கிறுக்குத்தனமான மிருகம்" என்று பொருள்.

இதன் கண்டுபிடிப்பு, “பல்வேறு விதிகளை வளைத்து, நொறுக்குகிறது" என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய டென்வர் இயற்கை மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான டேவிட் க்ராஸ் கூறுகிறார். BBC

No comments

Powered by Blogger.