Header Ads



தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும், தேர்தலுக்கு செல்வது ஆபத்தானது - ஓமல்பே சோபித தேரர்

நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்பதால், நிதி தொடர்பான சட்டமூலங்களை சட்டரீதியான நிறைவேற்றி முன்நோக்கி செல்வதற்காக நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் போன்ற ஐக்கிய கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் சம்பந்தமாக தற்போது காணப்படும் நிலைமையை ஆராயும் போது தேர்தல் ஒன்று செல்வது ஆபத்தானது என்பது தெளிவாக தெரியும் விடயம்.

இதனால், நிதி சம்பந்தமான விடயங்களை அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்றிக்கொள்ள நாடாளுமன்றத்தில் இணப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு செல்வதே சிறந்தது.

அதிகாரம் தொடர்பாக இருக்கும் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு, நாடு முதன்மையானது என்ற விடயத்தை முதன்மையாக கொண்டு அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டணியாக செய்றபட வேண்டும்.

அனைத்து கட்சிகளும் பங்கெடுக்கும் தேசிய அரசாங்கம் போன்ற கூட்டணியை ஏற்படுத்தும் சிறந்த அடிப்படை ஆரம்பங்களையும் நாங்கள் பார்த்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர், பிரதமர் பதவியை தம்வசம் வைத்திருந்த எதிர்க்கட்சி அதனை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. இது சிறந்த முன்னேற்றம்.

ஏதேனும் ஒருவகையில் கூட்டணியாக தேசிய கொள்கைக்கு அமைய செல்வதே சிறந்தது. தேர்தலை நடத்துவது ஆபத்தானது.

இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போகும் நடவடிக்கையாகவே நாங்கள் இதனை காண்கின்றோம் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.