Header Ads



உலகளவில் அதிகமான குழந்தைகள், பிறப்பார்கள் என எதிர்பார்ப்பு

கொரோனா தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் வழமையை விடவும் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில்தான் அதிக பெண்கள் கருத்தரித்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 1 கோடியே 35 லட்சமும், நைஜீரியாவில் 60 லட்சம் குழந்தைகளும் கூடுதலாக பிறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை 50 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் வழக்கத்தை விட உலகளவில் கூடுதலாக 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பார்கள் என்று யுனிசெப் அமைப்பும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக யுனிசெப் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா போர் கூறும்போது, "கொரோனா பிரச்சினை காலத்தில் அதிகளவில் குழந்தை பிறக்கும்போது, பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.