Header Ads



நல்லாட்சியில் கொரோனா தாக்கியிருந்தால், பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும். முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான முரண்பாடே நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது. அவசரமாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில், இன்று -10- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் வினைத்திறனாக செயற்படுகின்றது. ஜனாதிபதி ,பிரதமருக்கு இடையிலான இணக்கப்பாடு  சாதக காரணியாகவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் கொரோனா வைரஸ் நாட்டில் தாக்கம் செலுத்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்  இருவருக்கும் இடையிலான முரண்பாடு நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது. ஆகவே ஒப்பீட்டளவில் கடந்த அரசாங்கத்தை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் வினைத்திறனுடன் செயற்படுகின்றது.

கலைக்கப்பட்ட  பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர்  செயற்படுகின்றார்கள்.

கொரோனா வைரஸ் மத்தியில்  பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு  கிடையாது. தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்றார்.

2 comments:

  1. Donkey MY3
    Fox RAAnil hmmm yes

    ReplyDelete
  2. வீணாப் போன இரண்டு கள்ளக் கழுதைகள்.

    ReplyDelete

Powered by Blogger.