Header Ads



சீனாவிலிருந்து வெளியேறியுள்ள முதலீட்டாளர்களை கவர, இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு: சஜித்

(நா.தனுஜா)

சீனாவிலிருந்து தற்போது பெருமளவான முதலீட்டாளர்கள் வெளியேறியிருப்பதனால் அவர்களை மீள முதலீடு செய்வதற்காக எமது நாட்டை நோக்கிக் கவர்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்று அவர் மேலும் கூறியிருப்பதாவது,

எமது பொருளாதாரத்தை விரைவாக மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவையொன்றுள்ளது. தற்போது சீனாவிலிருந்து பெருமளவான முதலீட்டாளர்கள் வெளியேறியிருப்பதனால் அவர்களை மீள முதலீடு செய்வதற்காக எமது நாட்டை நோக்கிக் கவர்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்தியா பிரதமரின் நேரடி உத்தரவிற்கு அமைவாக விசேட செயலணியொன்றை அமைத்து, இத்தகைய முதலீடுகளைக் கவர்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது?  

வெளிநாட்டு முதலீடுகளை எப்படி ஈர்ப்பது என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகங்கள் இருப்பின், கடந்த காலத்தில் இலங்கையில் எவ்வாறு 200 ஆடையுற்பத்தித் திட்டம் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார். 

No comments

Powered by Blogger.