Header Ads



ரமழான் மாதத்தில் மரணத்தை தழுவிய, படைத் தலைவர் காலித் பின் வலீத்

- M S Abdul Hameed -
எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களால் #அல்லாஹ்வின்_போர்வாள் என்று வாய் நிறைய பாராட்டப்பட்ட #ஃகாலித்_பின்_வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 21, ரமழான் பிறை 18ல் மரணித்தார்.

இஸ்லாமிய வரலாற்றில் 115 போர்களை வழிநடத்திய வல்லமை மிக்க படைத் தலைவர்.

அனைத்துப் போர்களிலும் வெற்றி பெற்ற மாவீரர். தினவெடுத்த தோள்களுக்குச் சொந்தக்காரர். தோல்வியே கண்டிராத போர்த் தளபதி.

ஷஹாதத்தின் மேல் வேட்கை கொண்ட கொள்கை வேந்தர். எதிரிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் தனியாளாக நின்று எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்.

தன் மரணத் தறுவாயில் அழுதுகொண்டிருந்த ஃகாலித் பின் வலீதிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபொழுது, "நூற்றுக்கணக்கான போர்களில் பங்கெடுத்தேன். ஆனாலும் எனக்கு ஷஹாதத் என்ற பாக்கியம் கிடைக்கவில்லையே..." என்று கூறினார்.

#இஸ்லாம்_வென்றெடுத்த_ஷாம்

No comments

Powered by Blogger.