May 25, 2020

அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்

புனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

covid-19 தொற்று பரவும் நிலையில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஈத் பெருநாளை அமைதியாக கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் நோற்ற நோன்பு மற்றும் இறை வழிபாடுகளை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

covid-19 தோற்று பரவுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினதும் சுகாதார தரப்பினரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் முன்னைய காலங்களைப் போலன்றி முஸ்லிம்கள் அமைதியாகவும் வீடுகளில் அடங்கியும் தமது கடமைகளைச் செய்து விட்டு ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர். எமது நாடு மட்டுமன்றி முழு உலகும் இந்தப் இந்த பேரனர்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

 இந்தப் பேரனர்த்தத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த அனர்த்தத்தை வெற்றிகொள்ள உறுதிபூண வேண்டும். இக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமை, சகிப்புத்தன்மையை நான் மற்றும் எனது அரசாங்கமும் திருப்தி அடைந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 இந்த நன்னாளில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்களின் பிரகாரம் உலகமும் எமது தாய்நாடு இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பை நாடி சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த புனித நாளில் உங்கள் பிரார்த்தனைகளில் சுகாதாரத்துறையினர் பாதுகாப்புத் துறையினரை தியாகச் செயற்பாடுகளுக்கும் பிரார்த்தியுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

4 கருத்துரைகள்:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அல்லாஹ்வை நம்புகின்றார்.  அதனால்தான் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகிறார்.

இவருக்கு நெருக்கமான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதரையும், தூதையும் இவருக்கு எடுத்துரைத்தால் சத்திய மார்க்கத்தை நோக்கி நெருங்கி வந்துவிடலாம்.

அவ்வாறு வந்துவிட்டால், உலமாக்களின் வழிகாட்டலில் அல்லாஹ்வின் அருள் கொண்டும் 55 முஸ்லிம் நாடுகளின் ஆதரவோடும் அவர் இந்நாட்டை அமைதிப் பூங்காவாக துரிதமாக மாற்றி விடலாம்.

நம் தற்கால அரசியல்வாதிகளாவது இத்தூதை எடுத்துச் சொல்ல துணிபு பெறாத பட்சம், அஷ்-ஷெய்க் அலி அஹமது ரஷாதி போன்ற ஆலிம்கள் இத்தூதை செவ்வனே செய்ய ஆற்றல் பெற்றவர்கள் என்று எதிர்பார்க்கலாம்.  இந்த ஆலிமின் அண்மைய உரைகள் இதை எழுதத் தூண்டியது.

சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்துவார்களாக!

Mr. Past President !

Allah the TRUEN ONE GOD WHO Created this universe and all in it, is the GOD OF ALL.

So, Even you can ask him directly as he is your GOD also. Ask from your ONE TRUE GOD of this universe, if he wills he will answer your prayers. If he wills you will realise the truth and turn to him forever.

We pray for that.

அல்லாஹ் அன்னாருக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை நஸீபாக்குவானாக

சூழ்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட பாமரமக்களைத் தூண்டி இனவெறியை அவிழ்த்து விட்டு குளிர்காய்வதில் வல்லவர்கள் இவர்கள். சூரா அல்பகராவின் ஆரம்பப்பகுதியில் அல்லாஹ் விரிவாக விளக்கியிருக்கும் முனாபிக்குகள் கூட்டத்தில் தான் இவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.பிள்ளையைக் கிண்டிவிடுவதும் தொட்டிலை ஆட்டுவதும் தான் இவர்களின் தொழில்.எனவே அவசரமான தீர்மானத்துக்கு வரவேண்டாம். மிகவும் எச்சரிக்ைகயுடன் அணுகவேண்டியவர்கள் இவர்கள்.

Post a comment