Header Ads



கொரோனா ஏற்பட்டது முதல் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றி வருகிறோம்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது முதல் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் பணியாற்றி வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உலக சுகாதார கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் -உலக சுகாதார கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

ஆரம்பம் முதலே நாங்கள் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடன் பணியாற்றி வருகிறோம் என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், எவ்வாறு இது கையாளப்பட்டது என உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்தவேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.

மேலும் இந்த விசாரணை உலகம் முழுவதும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திய பிறகு ஆய்வு குறிக்கோளுடன், பாரபட்சமில்லாமல், நடுநிலைமையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்று முதன் முதலாக சீனாவில் பரவி பின்னர் உலகநாடுகளுக்கு பரவியதை அடுத்து சீனா இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றவில்லை. அனைத்தையும் மறைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சீன அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறித்த நாடுகளின் விமர்சனங்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.