Header Ads



இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் சமூகத்திற்குள் பரவவில்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் சமூகத்திற்குள் பரவவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் 19 விசேட நடவடிக்கை செயற்பாட்டு ஆய்வு குழுவின் இன்றைய -14- கூட்டத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 சுகாதார அமைச்சர் தலைமையில் இந்த குழுவின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே சுகாதார அதிகாரிகள் சமூகத்திற்குள் கொரோன வைரஸ் பரவவில்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு ஆரம்பம் முதல் எடுத்த நடவடிக்கைகளே இந்த வெற்றிக்கு காரணம் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

நாடு படிப்படியாக திறக்கப்படுகின்ற நிலையில் கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பொதுமக்கள் உரிய விதத்தில் பின்பற்றுகின்றார்களா என்பதை அவதானிக்கவேண்டிய பொறுப்பு பொதுசுகாதார பரிசோதகர்களிற்கு உள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை புறக்கணிக்கும் தனிநபர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை எதிர்காலத்திலும் பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.