May 04, 2020

இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா உதவி..? தெரண களத்தில் - கொழும்பு டெலிகிராப் தகவல்

கொழும்பில் உள்ள சீன தூதரகம் இலங்கையில் முஸ்லீம் விரோத பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கி நிதியளித்து வருவதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளிட்டுள்ளது.

முதல் கட்டமாக சீனாவின் முஸ்லீம் உய்குர்களுக்கு எதிராக சின்ஜியாங்கில் நடந்து வரும் அனேகரால் பிரபலமாக அறிந்திராத முஸ்லீம்-விரோத படுகொலை பற்றிய ஆவணப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் அத்தியாயம் ‘சிஞ்சியாங் மாகாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக தோற்கடிப்பதிலும், மக்களுக்கு அமைதியை பெற்றுக் கொடுப்பதிலும் சீன மக்கள் குடியரசின் (பி.ஆர்.சி) அனுபவத்திலிருந்து கற்றல் என்ற காணொலி தெரண தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது.

மார்ச் 31 ம் தேதி தெரணவைச் சேர்ந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வெளிப்படையான ஆதரவாளர் சதுரா அல்விஸ் எதிர்பாராத விதமாக சமூக பொதுவெளியில் தொலைக்காட்சி நேரலையின் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டது எமக்குத் தெரியும். முஸ்லிம்கள் மீது வெறுப்பச் கக்குகின்ற இனவெறிக் கருத்துக்கள் வாதபிட்டிய சிங்கள நிகழ்க்சியின் இடைவேளையின் போது கவனக்குறைவாக ஒளிபரப்பப்பட்டன. எனவே இது போன்ற இனவாத ஈனச் செயல்களுக்கு தெரண மற்றும் ஹிரு போன்ற ஊடகங்கள் பிரபலமானவை என்பது எல்லோருக்கும் தெரியும்.

தெரணவால் ஒளிரப்பாக இருக்கின்ற இந்த ஆவணப்படம் சீனாவின் தூர-வடமேற்கு தன்னாட்சி பிராந்தியமான ஜின்ஜியாங்கில் மிகப்பெரிய துருக்கிய சிறுபான்மை இனக்குழுவான உய்குர் இன முஸ்லிம்களுடன் தொடர்புபட்டது. சீன அரசின் மனிதாபிமற்ற மற்றும் நாகரீகமற்ற வெகுஜன கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமாகவும், அதிகளவிலான அநியாயமான கைதுகளின் மூலமாகவும் ஒடுக்குப்படும் முஸ்லிம்கள் இனக்குழுவே இவர்களாகும். உய்குர் முஸ்லிம்களின் மதத்தையும், இன அடையாளத்தையும் முற்றிலுமாக மாற்றுவதற்காக ‘Re-education Camps – மறு கல்வி முகாம்கள்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வதை முகாம்களை அல்லது பலவந்த தொழில் முகாம்களை சீன அரசு உருவாக்கி அங்கே ஏறத்தாழ ஒரு மில்லியன் முஸ்லிம்களை அவர்கள் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த முகாம்களை உலகின் மிகப்பெரிய சிறைசாலைகள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அழைக்கின்றனர்.

cfr.org இன் கூற்றுப்படி இந்த முகாம்களில் ஏப்ரல் 2017 முதல் சுமார் எட்டு இலட்சம் முதல் இரண்டு மில்லியன் உய்குர்கள் மற்றும் கசாக் மற்றும் உஸ்பெக் இன பிற முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நூற்றுக்கணக்கான முகாம்கள் சின்ஜியாங்கில் அமைந்துள்ளன. 1949 ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி) ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இந்த வடமேற்கு மாகாணம் சீனாவால் உரிமை கோரப்பட்டு வந்தது. எனினும் அங்கு வசிக்கும் உய்குர்கள் இப்பகுதியை கிழக்கு துர்கெஸ்தான் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் அது சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று வாதிடுட்டு வருகின்றனர். ஜின்ஜியாங் சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறது மற்றும் அது பாகிஸ்தான். கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளின் எல்லையாகும்.

சீன அதிகாரிகள் உய்குர்கள் தீவிரவாத மற்றும் பிரிவினைவாத கருத்துக்களை கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். எனவே இந்த முகாம்களை சீனாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும், அரசாங்கம் மற்றும் மக்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவதற்குமான ஒரு வழியாக அவர்கள் கருதுவதாக முன் வைக்கின்றனர்.

ராஜபக்ச ஆட்சியின் நெருங்கிய கூட்டாளியான சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “மதத் தீவிரவாதத்தின் நச்சுத்தன்மை” குறித்து எச்சரித்து வந்ததுடன் மேலும் 2014 ல் ஜின்ஜியாங்கிற்கு விஜயம் செய்தபோது தொடர்ச்சியான இரகசிய உரைகளில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க “சர்வாதிகாரத்தின்” கருவிகளைப் பயன்படுத்துமாறு வாதிட்டும் வந்தார். இந்த உரைகளை நவம்பர் 2019 இல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.

ராஜபக்ஷ ஆட்சியின் மூலம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான வெறித்தனமான இனவெறி மற்றும் பேரினவாத அணுகுமுறைகள் உள்ளிட்ட உயர்மட்ட மற்றும் வெளிப்படையான ஜனநாயக விரோத கொள்கைகள் கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் தேவையற்ற நெருக்கடிகளை தோற்றுவித்து வருவதாக பல மிதவாதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இந்த விசமப் பிரச்சார நடவடிக்கையும் இடம்பெற உள்ளது.

ஏப்ரல் 14 ம் தேதி, சுயாதீன வல்லுநர்கள் கூட்டணி (Independent Professional Alliance) ‘கோவிட் -19 க்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையிலான ஒரு தொடர்பை சித்தரிப்பதற்காக, சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இன ரீதியான விவரங்களை கையாள்வதில் சிறந்த மருத்துவ நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக செயற்பட்டு வருவதாக ராஜபக்ச ஆட்சி மீது கடுமையான கவலைகளை எழுப்பியது.

காவல்துறை அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள் (பிஹெச்ஐ) கிராம சேவகர்கள் (ஜிஎன்) மற்றும் பிற பொது அதிகாரிகள் போன்ற அதிகாரிகளால் தாம் துன்புறுத்தல் மற்றும் இழிவான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக முஸ்லிம்களால் இலங்கை முழுவதிலும் இருந்து வந்த பல புகார்களின் பின்னணியில் இதனைத் தெளிவாகக் காணலாம். “முஸ்லிம்களை நம்ப முடியாது …” மற்றும் “… கொரோனா வைரஸ் பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் மூல காரணம்…”, மற்றும் “களுத்தறை, மருதானை மற்றும் பேருவலை ‘முஸ்லிம்கள்’ வைரஸை பரப்பியதற்கு எடுத்துக்காட்டுகள்” போன்றவை கருத்துக்கள் இதற்கு உதாரணங்களாகும்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று, கோவிட் -19 உயிரிழப்புகளை உடனடியாக தகனம் செய்ய கட்டாயப்படுத்தும் விதிமுறைகளை அரசாங்கம் வர்த்தமானி செய்தது முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒரு ‘பெரிய தாக்குதல்’ என்று பகிரங்கமாகக் கருதப்படுகிறது .

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்து ஊடக சேனல்களினன் முன்னால் சிறைப்பிடிக்கப்பட்ட பார்வையாளர்களாக மாறியுள்ளதால் தங்களது அழுகிய இலங்குகளை அடைந்து கொள்வதற்காக அரச சார்பு அரச மற்றும் தனியார் ஊடகங்கள் இந்த வங்குரோத்து ஊடக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது எதிர்காலத்தில் நாட்டுக்கு பெரும் அழிவைத் ஏற்படுத்தும் என நடுநிலையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நன்றி - தாருல் அமன்

1 கருத்துரைகள்:

இதற்கு முடிவே இல்லையா

Post a comment