Header Ads



இயல்புநிலைக்கு மீள திரும்புவோம்...

நாம் மிகச் சிறந்த கலாசாரத்தை உடையவர்கள். ஆனால் மேற்குலக நாகரீகத்தில் மூழ்கி இன்று தொற்று நோய்களுக்கு பயப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். எம்மிடமிருந்த சுயபோசணை வரையறை வாழ்வை முற்றாக புறந்தள்ளி அனைத்தையும் மேற்குலகிலிருந்து மிகவிரைவாக இறக்குமதி செய்துள்ளோம்.

மேற்குலக வாழ்க்கைமுறை மாத்திரமல்ல. கல்வி மற்றும் சட்டங்கள்கூட எமக்கு பொருந்தாததாகும் என நாம் தற்போதாவது புரிந்து கொள்ள வேணடும்.

எமது வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக எமது நிலையாமையும் எமக்கேயுரியதானவற்றின் மூலம்

நாம் பெற்றுகொண்ட அனைத்தும் எமக்கு தற்போது இல்லாமற்போயுள்ளது. நாம் இழந்த அனைத்தையும் மீளப்பெறுவது எமது கைகளில்தான் தங்கியுள்ளது.அதில் பிரதானமானது சுத்தமாகும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு உடல் மற்றும் மனத்தூய்மை  பற்றிய பயிற்சியை   வழங்கவேண்டும்.

நாம் வாழும் சூழலை ஆரோக்கியமாக பேணுவதும் அவசியமாகும். தற்போது நாம்  அதுகுறித்து  கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். வாரத்துக்கொருமுறை செய்யும்  துப்பரவு நடவடிக்கைகள் பல உணடு. தலையணை, மெத்தை என்பவற்றை  வெய்யிலில் காயவைத்தல். திரைசீலைகனை கழுவுதல் என்பனவே அவையாகும்.

மேலும்அனைத்து யன்னல் கதவுகளையும் திறந்து சிலந்தி வலைகளை அகற்றி தாசு தட்டி துடைக்க வேண்டும். மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும். வீட்டை சூழவுள்ள தோட்டத்தை கூட்டி துப்புரவு செய்து சரியான முறையில் கழிவுகளை அகற்ற வேண்டும். சாம்பிராணி புகை பிடிக்கலாம். நமக்கு சும்பிரதாய உணவு முறைகளிலுள்ள முக்கியத்துவம் தற்போது நன்கு புரிகின்றதல்லவா?. நாம் நச்சற்ற உணவுகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அன்று நாம் பெற்றோர்களின் தலைமையில்

மிகவும் அக்கறையுடன் ஆரோக்கியமான வீட்டுத்தோட்டங்களை அமைத்தோம். சிறிய   இடமென்றாலும் எல்லா  வீடுகளிலும் வேப்பமரமொன்று  காணப்பட்டது. அதைத்தவிர பலா, ஈரப்பலா, மா, பப்பாளி, முருங்கை, தென்னை மரங்களையும் நட முயற்சி செய்தோம். அதுமாத்திரமல்ல மருத்துவ குணங்களையுடைய மாதுளை, துளசி, முடக்கத்தான். குப்பைமேனி, ஆடாதோடை, நொச்சி போன்ற மூலிகை செடிகளையும் வளர்த்தோம். வீட்டு அங்கத்தவர்களின் உணவுக்காக வல்லாரை,பசளி. அகத்தி, ரம்பை. கறிவேப்பிலை போன்றவற்றை மிகமகிழ்ச்சியுடன் பயிர்செய்தோம்.

எமது உணவு முறைகள் மிகவும்  எளிமையானதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் அமைந்திருந்கன. இன்று போல் பாணையும் சோறையும் மாத்திரம் உணவாக உண்டவர்களல்ல எமது மூதாதையர்கள். காலையுணவாக மரவள்ளிக்கிழங்கு. சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற கிழங்கு

வகைகளையும்,  பலா, குரக்கன், எள்ளு, கடலை, சோயா, பயறு, தாமரை அரிசி சோறு என்பவற்றை உண்டார்கள். கருவாடு, மீன், முட்டை, மரக்கறி வகைகள் மற்றும் அதிகளவு கீரை வகைகளை உணவுக்காக பயன்படுத்தினார்கள். மாமிசத்தை மிகக்குறைவாகவே உண்டார்கள். மூன்று வேளை  மாத்திரமே   உணவை உண்டார்கள். மசாலாக்களை அதிகமாக உபயோகித்தார்கள்.

அவற்றையும் வீட்டிலேயே தயாரித்தார்கள்.

கடந்த சில   தசாப்தங்களாக சாதிக்காய், ஏலக்காய், கறுவா, கராம்பு போன்ற பெறுமதி வாய்ந்த நோயெதிர்ப்பு வாசனை திரவியங்கள் ஏற்றுமதிக்காக மாத்திரம் பயிரிடப்பட்டன. அதனால்  அவற்றின் விலை  அதிகரித்ததுடன் அவற்றின் பாவனையும் எம்மிடமிருந்து குறைந்து போனது.

நாம் காலையும் மாலையும் பால்மாவை தேநீருக்காக பயன்படுத்தியவர்களல்ல. அதற்குப் பதிலாக பசும்பால்,

கொத்தமல்லி, ஆவாரம்பூ, மரமஞ்சள், வில்வப்பூ போன்ற மூலிகைகளை பானங்களாக அருந்தினோம்.

குரக்கன்மா கஞ்சி, கித்துள்மா கஞ்சி, இலைக்கஞ்சி மற்றும் பார்லி, சவ்வரிசி கஞ்சி என்பவற்றை உணவில் சேர்த்துக் கொண்டோம். அதனால்  எமக்கு அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.

நாம் தற்போது மீண்டும்  அதனை எண்ணிப்பார்க்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது  மனதும்  உடலும் இணைந்ததாகும். எமது சம்பிரதாயமான வாழ்க்கை முறையை மீளவும் பின்பற்றி  வாழ்வதன்மூலம் நாம் எமது  ஆரோக்கியத்தைப் பேணலாம். போலியான வாழ்வை கைவிட்டு எளிமையான சௌபாக்கியம் நிறைந்த நாட்டில் யதார்த்தமான, புத்திசாலித்தனமான, ஆரோக்கியமான குடிமக்களாக வாழ திடசங்கற்பம் கொள்வோம்.

நன்றி: சிலுமின   
தமிழில்: வீ.ஆர்.வயலட்

1 comment:

Powered by Blogger.