Header Ads



ஜம்மியத்துல் உலமாவின் கீழ் அனைத்து, முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும்..

- Mahibal M. Fassy -

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் அதிகூடிய ஆதரவைப் பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும்.  

சில பிரிவுகள் அவர்களோடு இணையாதிருப்பின் அவற்றுக்கான காரணிகள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்.  ஒற்றுமை முதன்மைப் படுத்தப்படல் வேண்டும்.

இஸ்லாம் மனித வாழ்வுக்கான அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கம் என்று போதனை செய்வதோடு  மட்டும் விட்டு விடாமல் அதைச் செயலிலும் நிரூபிக்க உலமாக்கள்  முன்வர வேண்டும்.  

மனித குலத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இறைவனதும் அவனது தூதரினதும் போதனைகளில் தீர்வு இருப்பதை நம்புபவர்கள் நாங்கள்.

அரசியல் பலம் ஒரு சமுதாயத்தின் இருப்புக்கும் பலத்திற்கும் ஆதாரமாகும்.

நமது தற்போதைய முஸ்லிம் என்ற பெயரிலுள்ள அரசியல்வாதிகளில் பலர் புரியும் தவறான நடத்தைளை கண்டும் காணாமல் இருந்து விட முடியாது.  அதற்குத் துணை போகவும் கூடாது.  

அதற்குப் பதிலாக, உலமாக்களை இஸ்லாமிய போதனைகளின் பிரகாரம் முஸ்லிம் சிறுபான்மைச் சூழலுக்குப் பொருத்தமான அரசியல் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு தேர்தல்களை முகம் கொடுக்கத் தயாராக்க வேண்டும்.  

தற்போதைக்கு, அவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடாதபோது மாத்திரம், முஸ்லிம் அரசியல்வாதிகளை உலமாக்கள் தலைமைப்பீடத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து  அவர்களை இஸ்லாமிய போதனைகளின்படி சூரா முறையில் வழி நடத்த வேண்டும்.  

முஸ்லிம்களின் வாக்கு வங்கி எப்போதும் உலமா சபையின் ஆதிக்கத்தின் கீழேயே வைத்திருக்கப்படல் வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு அதில் தேறியோரே தகுதியான வேட்பாளர்களாக அறிவிக்கப்படல் வேண்டும்.

அப்போதுதான் முஸ்லிம்களும் ஏனையோரும் தமக்குச் சேவை செய்யத் தகுதியான வேட்பாளர்களை இலகுவாக இனம் கண்டுகொள்ள முடியும்.

இது விடயத்தில் உலமா சபைக்கு மாபெரும் பொறுப்பு உள்ளதைத் தட்டிக் கழித்து விட முடியாது.

16 comments:

  1. ஆணியே பிடுங்க வேணா

    ReplyDelete
  2. Hope the ACJU will understand the need to bring all srilankan muslims under its leadership at this crucial situation.

    This sole leadership can not be achieved, if ACJU keeps favouring certain jamaaths activity more than other.

    Infact there should not be any jamaath deviations in Islam, rather all of us should unite under the rope of Allah ( Quran & Sunnah of Muhammed sal.
    ).

    But the differences between jamaaths exist due thier own way of understanding of Quran and Sunnah as per the guidance of thier Jamaath's heads and scholars.

    BUT The correct way to understand the Quran and Sunnah is not above.....

    Rather we all muslims should try to understand the Quran and sunnah, in the same way the 3 successful generations of islam (salfus saliheens) understood and acted upon.

    I Wish ACJU will stick to the manhaj of these 3 generations in islam and to call and guide all muslims and all jamaaths to the same.

    Then ACJU will be trully able to provide a strong powerfull leadership to guide the Srilankan muslims toward both worldly and eternal success by the help of Almighty Allah.

    Note: It is not correct for any so called jamaaths to deviate the ACJU provided that it stick to the way of 3 successful generations of islam (sahaaba, tabieen and atbauth tabieens).

    All jamaaths should realize that they can not bring all muslims under their group... Rather all jamaaths should come under one common and correct ground in Islaam that is the way of 3 successful generations's way (known as Manhaj of salafus saliheens)

    MAY ALLAH GUIDE THE ACJU, ALL JAMAATHS AND PUBLIC TO THE WAY OF SAHAABA, TABIEEN AND TABAH TABIHEEN in umderstandimg amd practicing the ISLAM and get united.

    ReplyDelete
  3. Finish.. that will be the end of all our hopes. Kindly talk sense. What leadership qualities they have for us to follow? Can you please explain. I don't have anything personal with them. But as a neutral person I see that they are the reason for most of the problems Muslims are facing in this country.

    ReplyDelete
  4. விரன்டவாதம் செய்யும் இடுவம்பர்களை என்ன செய்வது

    ReplyDelete
  5. Good suggestion but all the TJs are the problems.

    ReplyDelete
  6. இந்த சிந்தனை வெற்றியளிக்குமானால் இது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஓர் மைற்கல்லாகவும் , வரலாற்று சாதனையாகவும் அமையும் .மேலும் சிந்தனையை முன்வைப்பதில் மாத்திரம் நின்றுவிடாமல் இதனை செயல் ரூபத்திற்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களையம் முன்வைத்து செயற்பாடுகளை ஆரம்பித்தல் வேண்டும்

    ReplyDelete
  7. மிக முக்கியமான விடயம் ஒன்றினை பதிவு ஏற்றியதற்காக சகோதரர் Mahibal M. Fassy அவரகளுக்கு எனது நன்றிகள்.
    எல்லாக் காலத்திலும் மிகவும் நடுநிலையான அமைப்பாகவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU) இருந்து வந்துள்ளது. இலங்கையின் கற்று அறிந்த தலைசிறந்த உலமாக்கள் அங்கம் வகிக்கும்; இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்ட விதிகளின் பிரகாரம் கூட்டிணைக்கப்பட்ட அமைப்புதான் இந்த ACJU எனப்படும்; அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்ற அமைப்பாகும். இந்த ACJU நடுநிலையாகச் செயற்பட்டு வருகின்றது. சகல மதப் பெரியார்களுடன் மிகவும் சுமுகமான உறவுகளை காலம் காலமாகப் பேணி வருகின்றது. கண்ணியமிக்க ஒரு உலமா பெருந்தகை இவ் அமைப்பிற்கு தலைவராக இருந்தாலும் முடிவுகள் மசூரா அடிப்படையிலேதான் ஒன்றுக்குப் பலமுறை ஆராய்ந்தே எடுக்கப்படுகின்றன. அரசியல் பலம் ஒரு சழுதாயத்தின் இருப்புக்கும் பலத்திற்கும் ஆதாரமாகும். உண்மையை சொல்லப்போனால் தற்போதைய முஸ்லிம் அரசியலாளர்களில் முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசக்கூடிய எவரும் இல்லை. மேற்குறித்த சகோதரரின் விடயதானத்தில் பல சிறப்பான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை திரும்பத் திரும்பக் கூறத் தேவையில்வை. முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் யுஊதுரு மூலமே எதிர்காலத்தில் நெறிப்படுத்தப்படல் வேண்டும். சகல உலமாப் பெருந்தகைகளும் பள்ளி நிர்வாக அமைப்புகளும் இதற்கான திட்டங்களையும் பரிபூரண ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும். MP பதவியினை மக்கள் சிலருக்கு வழங்கியதன் மூலம் அவரகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கியது போதும். விழித்து எழுவோம். முஸ்லிம் மக்களாகிய நாம் இந்த விடயத்தில் கவனமாகச் சிந்தித்து செயற்படல் வேண்டும்.
    The All Ceylon Jamiyyathul Ulama (ACJU) has been the most neutral organization of all time. Sri Lanka's learned masterpieces are part of; The ACJU is a body incorporated by the rules of the Parliament of Sri Lanka. This ACJU is acting neutral. It maintains very good relations with all religious dignitaries, and General Public of all sectors. Although a decent Ulama is the leader of this organization, the decisions are made on a multi-faceted basis. Political strength is a source of strength and strength. In fact, none of the current Muslim statesmen can speak for the rights of Muslims. There are many outstanding features in this brother's statement. There is no need to repeat them. The political future of Muslims must be regulated in the future by the ACJU. All Ulamas, Mosques management organizations and Muslim intellectuals must provide plans and support for this. Just by giving some people the position of MP, they have given them employment only. Wake up and wake up. We, the Muslims, need to think and act on this issue.

    ReplyDelete
  8. sure. each and every muslims have to be united as one ummah. Don't argue with in our community. If anyone comeup with any suggestion that Can be treated carefully with Quran and Saheeh Hatheeth. Don't make more and more groups within our community. its enough to make community lets make all of as one union.

    ReplyDelete
  9. முதலில் ACJU ஒரு பக்கம் சாய்வதினை நிறுத்தவேண்டும், தற்போதுள்ள சமுதாயம் கண்ணா பின்னா என்று ஒரு அமைப்பினை பின்பற்றும் மக்களை கொண்டதல்ல.. இறந்தகாலம் பாடி இருக்கலாம் , ஆனால் வருங்காலம் அதிகம் சிந்திக்க கூடிய மக்கள் உள்ள காலம்.
    ஒரு குறிப்பிட்ட ஜமாத்துக்கு சோரம் போகும் போது அதனை யாரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் , அந்த ஜமாத்தும், நமக்கு நேரமில்லை என்று கூறும் மக்களே ACJU வை ஆதரிப்பார்கள்.
    ACJU இல் நிறைய திருத்தங்கள் வேண்டும், மற்றவர்கள் முதலில் திருந்தவேண்டும் என்று நினைப்பது தவறு

    ReplyDelete
  10. யாரும் யாரையும் 100% திருப்தி படுத்த முடியாது.

    ReplyDelete
  11. Bro's Let's Pactice n adopt Unity in Diversity, Unanimity cannot be expected any where!

    ReplyDelete
  12. வெளியில் இருந்து பார்பதற்கு ஜ. உ. ஒரு நடுநிலை நிறுவனமாக சோடிக்கப்பட்டாலும் யதார்த்தம் அதுவல்ல. காலம் காலமாக தப்லீக் இயக்க சிந்தனை கொண்டவர்களே அதனைக் கையாளும் வகையில் தேவையான திருத்தங்களைச் செய்து அவர்கள் அதனைக் கபளீகரம் செய்கின்றனர். தலைமைக் காரியாலயம் சென்று பார்த்தால் புரியும் அங்குள்ளவர்களின் கர்வமும் தலைக்கனமும். அவர்கள் தங்களைத் தாங்களே பெரும் பெரும் மேதாவிகள் என பன்மடங்கு மிகையாக எடைபோட்டுக்கொண்டு தடுமாறுகிறார்கள். அவர்கள் யாரிடமும் எந்தக் கருத்தைச் சொன்னாலும், கேட்டாலும் அவர்களது பதில்; முப்தி சாபுக்கு இது பிடிக்காது, அது பிடிக்காது, முப்தி சாபுட முடிவு இதுதான் அதுதான் என்றவாறுதான் இருக்கும்.
    இப்போ யோசிங்கோ அவங்க எந்த ரூட்ல பயணிக்கிறாங்க என்று?
    முதலில் அவர்கள் படித்தவர்களுக்கு உரிய இடம் வழங்கி நடுநிலைக்கு வந்தால் சகோதரரின் கருத்து நடைமுறை சாத்தியமாகும் என நான் நினைக்கிறேன்!!!

    ReplyDelete
  13. With due respect to you brother Mahibal M. Fassy, "The Muslim Voice" wishes to inform that all what you have said "IS NOT TRUE" IN YOUR ABOVE STATEMENT/NEWS ITEM. If you had followed what "The Muslim Voice" has been telling about the plight of the Sri Lankan Muslim Community/Muslim Vote Bank viz-a-viz the Muslim political leaders and Muslim politicians (not all) and the ACJU and that of the ACJU hierarchy, you will understand the importance of bringing about change in these leadership, which is an urgent need in the Muslim community at large, Insha Allah. YOUR SUGGESTION CANNOT BE ACCEPTED UNDER ANY CIRCUMSTANCES BY THE MUSLIM COMMUNITY OF SRI LANKA, Insha Allah. IT IS NOT A PROPOSAL THAT COULD BE THE BEST ANSWER TO THE PLIGHT OF THE MUSLIM COMMUNITY AT LARGE, UNDER THE PRESENT POLITICAL AND SOCIAL ADMINISTRATION OF THE COUNTRY, Insha Allah. Brother Attorney-At-Law Ali Sabry has suggested a proposal to create a unique Council of Muslim Affairs under the new government after the general elections and that should be tjhe most welcome institution for the Administation of all Muslim Affairs in the future. The Muslims of Sri Lanka should support that proposal whole hearted, Insha Allah. Lets be patient till them, Insha Allah.
    The cry in the community is for a change, Insha Allah.
    But "The Muslim Voice" is only trying to kindle the "aspirations and ispirations" of the Muslim community and the 3500 odd Moulavis and Uleama Members of the ACJU concerning the ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new "honest and dignified culture" within in the Sri Lanka Muslim Community. "THE MUSLIM VOICE" WISHES TO KEEP THISE ISSUES WITHIN OUR SELVES/OUR COMMUNITY AND GOING TO THE POLICE TO MAKE COMPLAINTS AS SUGGESTED BY SOME CONCERNED MUSLIMS IN THESE COLUMS WILL COMPLICATE MATTERS FOR ACJU AND RIZVI MUFTHI. LOOK AT THE QUESTIONS RAISED AT THE PSC AND THE TV REGARDING THE TYPES OF EXPENSIVE VECHILES USED BY OUR ACJU MOULAVIS? LOOK AT THE QUESTIONS RAISED REGARDING THE WEALTH AND LIFESTYLE OF THIS ULEMA LEADER IN TV TALK SHOWS AND NEW/WEB NEWS OUTLETS. LOOK AT HOW RIZVI MOULAVI BLUFFED THE PSC ABOUT MANY IMPORTANT ISSUES AND EVEN ABOUT ISLAM AND THE HALAL CERTIFICATE ISSUE.
    "THE MUSLIM VOICE" has been asking "DUA" from God AllMighty Allah after every daily prayers and Jumma's since the manner in which the so-called Mufthi Rizvi, the incumbent president started to flirt with politicians and made a "MOCKERY" of the "HALAL ISSUE" to amaze millions of rupees for his personal gains and benefits with the support of "DECEPTIVE/MUNAAFIK" and "HOODWINKING" Muslim politicians and some professionals. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -2015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
    (Contd: below).

    ReplyDelete
  14. (Contd: from above).
    The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters or even trying to become "REELECTED" as the President of the ACJU. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions. THE ACJU NEEDS A NEW DILIGENT, HONEST AND TRUELY ISLAMIC RIGLIGOUSLY WAY OF LIVING LEADER Insha Allah. So "The Muslim Voice" urge you to work towards that, Insha Allah.
    The below given link will further enlighten the concerned Muslims of changes in the ACJU, Insha Allah.
    http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_281.html
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  15. மேலே தெரிவிக்கப்பட்ட கருத்து ஓரளவு நியாயமான ஒரு நடுநிலையான கருத்தாகத் தென்படுகின்றது. உள்ளங்களின் உண்மை நிலையை அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  16. முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு, முழு முஸ்லீம் சமூகமே ACJU கும் அதன் தலைமைக்கும் எதிராக கோபத்தோடும் விரக்தியோடும் இருக்கின்ற இந்த காலகட்டத்தில், இந்த ஜமாத்துக்குள்ளே இருக்கும் Mahibal, Suhood போன்றவர்கள், தமது பெயரும், பதவியையும், வருமானத்தையும் தக்கவைத்துக்கொள்வதட்காக, முஸ்லீம் சமூகத்தின் கோபத்தையும், விரக்தியையும் வேறு பக்கத்துக்கு திசை திருப்புவதட்கான கீழ்த்தரமான முயட்சேயே இந்தக் கட்டுரை।

    முஸ்லீம்களே இது போன்ற கீழ்த்தரமான சூழ்ச்சிகளுக்கு ஏமாந்து விடாதீர்கள்।

    ReplyDelete

Powered by Blogger.