Header Ads



சில அரச ஊழியர்களின், பரிதாப நிலை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அரச அலுவலர்கள் சிலர் தேர்தல் இடம்பெறாமையால், இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்றது. மார்ச் 19ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெற்றதும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அன்றைய தினமும் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பணியாளர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பணி நிலைகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தனர்.

இதனால் மாதாந்த வேதனத்தை அவர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலும் இல்லை, மாதாந்த வேதனமும் இல்லை என்ற இரண்டும் கெட்டான் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. இந்த 'அரச ஊழியர்கள்' பதவிக்குத் தகுதியற்ற கொள்ளைக்கூட்டம் என இறைவன் தீர்மானித்தமையால் இந்த கொள்ளையர் கூட்டத்தை அல்லாஹ் அகற்றிவிட்டான். இத்தகைய கொள்ளையர்களுக்கு சம்பளமோ பதவிகளோ வழங்கத் தகுதியற்றவர்கள் என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

    ReplyDelete

Powered by Blogger.