Header Ads



புதிதாக திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு, சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்கள்

இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் மீண்டும் திருமணங்களை நடத்த முடியும். எனினும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பாதி பேர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

மண்டபத்திற்குள் வருபவர்கள் முக கவசங்களை அணிய வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மண்டபத்திற்குள் நுழைவற்கு முன்னர் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.

மண்டபத்திற்குள் நுழையும் இடத்தில் நீர் வழங்குவதற்கான கருவிகளை பொருத்த வேண்டும். மண்டபத்திற்கு வருவதற்கு முன்னரும், மண்டபத்தில் இருந்து வெளியேரும் போதும் அனைத்து உபகரணங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

நீர் பருகும் மற்றும் உணவு உண்ணும் தட்டுகள் விருந்தினர்களும் குடும்பத்தினரும் பயன்படுத்த கூடாது. உணவு பகிர்வதற்காக தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.

அதன் மூலம் பலர் ஒரு தட்டுகள் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியும். ஒரு குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் தடை விதித்தல் ஆகிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.