Header Ads



இலங்கையர்களின் உபசரிப்பை உலகுக்கு தெரியப்படுத்திய இஸ்ரேலியர் - இலங்கையர்களை நன்றியுடன் நினைவுக்கூற வேண்டும் என்கிறார்


கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு விமாண சேவைகள் இடம்பெறாமையால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். 

இவ்வாறு நிர்கதியாகியுள்ள இவர்களை அரவணைக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. 

உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இலங்கை மக்களின் உபசரிப்பை உலகுக்கு தெரியப்படுத்தியவர் இஸ்ரேலிய பிரஜையான பிரபல ஒளிப்பதிவாளர் Nuseir Yassin என்பவராவார். 

அவர் தனது வீடியோவில் கொவிட் 19 தொற்றிலிருந்து விடுப்பட முயற்சிக்கும் ஒரே நாடு இலங்கை என தெரிவித்துள்ளார். 

எல்ல நகரில் சிக்கியுள்ள சுற்றலா பயணிகள் தொடர்பில் அத தெரண அண்மையில் செய்தி வெளியிட்டது. 

அதில் சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அவற்றை நிவர்த்திக்க எல்ல மக்கள் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் தெரியப்படுத்தப்பட்டது. 

இவ்வாறான நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை மடிந்து போய் விட்டதாக Nuseir Yassin தனது காணொளியில் தெரிவித்துள்ளார். 

உலகம் வழமைக்கு திரும்பிய பின்னர் இலங்கையர்கள் நன்றியுடன் நினைவுக்கூறப்பட வேண்டும் என அவர் அந்த காணொளியின் மூலம் உலகுக்கு செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். 

இலங்கைக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதன் மூலமாகவே அந்த நன்றி கடனை செலுத்த முடியும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.