Header Ads



தினமும் கொரோனா பரிசோதனை செய்கிறேன்: ட்ரம்ப்

கரோனா வைரஸ் தொடர்பாக தினமும் பரிசோதனை செய்து கொள்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தானும் துணை அதிபர் மைக் பென்ஸும் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இதுகுறித்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, “கரோனா தொற்றுக்கு ஆளான அந்த ராணுவ அதிகாரியுடன் தொடர்பில் இருந்தோம். இதனைத் தொடர்ந்து நானும், துணை அதிபர் மைக் பென்ஸும் கரோனா பரிசோதனை செய்து கொண்டோம். நான் தினமும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மைக் பென்ஸுக்கும் முடிவு சாதகமாக வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

3 comments:

  1. Make sure your mental wellness via doing mental check in every second

    ReplyDelete
  2. நீ இருக்க வேண்டும். அப்பதான் நீயும் கொரோனாவும் சேர்ந்து அமெரிக்காவை ஒரு வலிபன்னிடுவீங்க.

    ReplyDelete
  3. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை, அவர்கள் கொலை செய்யப்படுகிறார் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை இங்கே ஒரு பொருட்டாகவே இல்லை. அமெரிக்காவின்நான் டன் கணக்கில் மக்கள் இறக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் இவர்கள் எல்லாம் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. நீ மட்டும் நன்றாக வாழு ராஜா

    ReplyDelete

Powered by Blogger.