Header Ads



ஒற்றைக்காலில் நின்றாலும் பாராளுமன்றம் கூட்டப்படாது

ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த எதிரணியினர் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவரத் தீர்மானித்துள்ளனர். அதுதான் அவர்கள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கூக்குரல் இடுகின்றனர் எனமஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்தை விளைவிக்க எதிரணியினர் திரைமறைவில் திட்டம்தீட்டியுள்ளனர்.

அது தான் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர். இறுதியில் எதுவும் செய்ய முடியாத நிலையில் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகவும், பொதுத்தேர்தல் திகதி தீர்மானத்தை எதிர்த்தும் அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

எனினும், அவர்களின் கனவை நனவாக்க விடமாட்டோம் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச

பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் இரு அணிகளும் மீண்டும் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த அவர்கள் தற்போது ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணைகொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர். அதுதான் அவர்கள் பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.கூக்குரல் இடுகின்றனர்.

இலங்கைஅரசியலில் முகவரியற்றுப் போகின்ற நிலையில் இருக்கின்ற இவர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடிக்கின்றனர்.

அதற்கு இலக்கு நாட்டின் ஜனாதிபதியின்பதவியா? பழைய நாடாளுமன்றத்தில் தமக்குத் தான் பலம் அதிகம் இருக்கின்றது என்ற இறுமாப்பில் எதிரணியினர் குறுக்கு வழியில் அரசுக்கு எதிராக சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றனர்.

எக்காரணம் கொண்டும் பழைய நாடாளுமன்றம் கூடவே மாட்டாது. பொதுத்தேர்தலில் பின்னர் புதிய நாடாளுமன்றம் தான் கூடும்"என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில

தற்போதைய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடையாது. எனவே,கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால் எதிரணியினர் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வருவார்கள்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டவும், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தவும் எவ்வித தேவையும் அரசுக்குக் கிடையாது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே எதிரணியினர் நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு தொடர் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.இதற்கெல்லாம் அரசு அடிபணியாது.

பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணிவெற்றி பெற்று பலமான அரசை அமைக்கும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.