Header Ads



ஊரடங்கு காரணமாக வீடு திரும்பாத பெற்றோர், தனிமையில் இருந்த மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு  வாகரை பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய  ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் இரு சகோதரிகளை குறித்த மாணவியின் பொறுப்பில்  விட்டுவிட்டு கடந்த மார்ச் மாதம் இரத்தினபுரிக்கு சென்றுள்ளனர். 

இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து,  திரும்பி தமது வீட்டிற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவி மற்றும் அவருடைய இரு சகோதரிகள் உட்பட 3 சிறுமிகளும் தனியே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சிறுமிகள் தனியே இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர்  15 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு வாகரையை சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் கைதுசெய்ததுடன் குறித்த மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இரத்தினபுரியில் இருந்து வரமுடியாத நிலையில் இருந்த குறித்த சிறுமியின் பெற்றோரை பொலிஸார் விசேட அனுமதி வழங்கி வீட்டிற்கு வரவழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கற்பழிப்பு என்பது கொலைக் குற்றத்திற்கு சமனானது. இந்த கொராணா காலத்தில் அரச நிறுவனங்கள் அதிகம் செயல் இழந்து காணப்படுவதனால் இப்படியான குற்றங்களுக்கு உரிய தண்டணைகளை, உரிய அபிஸேகங்களுக்குப் பின்னர், சமூகம் கொடுப்பதே சிறப்பு என்பது எனது அபிப்பிராயம்.

    ReplyDelete

Powered by Blogger.