Header Ads



ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யும் கோரிக்கையை, அரசிற்கு வழங்க ஒரு இலட்சம் கையொப்பங்கள் சேகரிப்பு


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

 கொவிட் 19 னால் மரணித்த ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யுமாறு கோரி  அரசிற்கு சிவில் சமூக அழுத்தத்தை வழங்கும் நோக்கில்  அம்பாரை மாவட்டத்தில் பெறப்படவுள்ள 1,00,000 (ஒரு இலட்சம்) கையெழுத்துக்களைப்பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முஸ்லிம் மரபுகள் மற்றும் கலாசார மையத்தின் முக்கியஸ்தரும் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினருமான ஏ.எல்.தவத்தின் வழிகாட்டலின் கீழ இடம் பெறும் இக்கையெழுத்து வேட்டை தொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

அனைவரும் இந்தப் பணிக்காக ஒத்துழைப்பு வழங்குவதோடு அம்பாரை மாவட்டத்தில் இது வெற்றிகரமாக நிகழ்ந்தால் ஏனைய  அனைத்து மாவட்டங்களுக்கும் இது பரவலாக்கப்படும் இதே வேளை ஏனைய மாவட்டங்களில் சிங்கள சகோதரர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட தயாராக இருக்கிறார்கள் எனவும் சில சிங்கள சகோதரர்கள் ஜனாஸா எரிப்புக்கு எதிராக  ஏலவே மனித உரிமை ஆணைக்குழு வரை சென்றுவிட்டனர்எனவும். சில சிங்கள சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.


3 comments:

  1. ஏற்கனவே 4 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு விட்டன அதில் ஒரு ஜனாஸா கொரோனா நோய்த்தொற்று இல்லையென்று கண்டறியப்பட்ட பின்பே எரிக்கப்பட்டது.இது சம்பந்தமாக வழக்காட சிவில் சமூகம் ஏற்கனவே தயாராகிவிட்டது.வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.இவ்வழவும் நடந்நதற்குப்பிறகும் ஏன் இந்த கையெழுத்து வேட்டை?



    ReplyDelete
  2. எல்லாம் நடக்கட்டுமே. நீயத்தின் பிரகாரமே கூலி.சூழ்ந்து அறிகின்றவன் பார்த்துக் கொள்வான். இடையினில் மூக்கை நுழைத்து சந்தேகத்தை விதைக்கும் ஹன்னாஸாக ஏன் நாம் எம்மை அமைத்துக் கொள்ள வேண்டும்?

    ReplyDelete
  3. எல்லாம் நடக்கட்டுமே. நீயத்தின் பிரகாரமே கூலி.சூழ்ந்து அறிகின்றவன் பார்த்துக் கொள்வான். இடையினில் மூக்கை நுழைத்து சந்தேகத்தை விதைக்கும் ஹன்னாஸாக ஏன் நாம் எம்மை அமைத்துக் கொள்ள வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.