May 25, 2020

முஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..


ஜனநாயக தேசத்தின்
“நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும்
ஊடகத்துறை பற்றி
உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு
பாடம் எடுக்க வேண்டும் என்பது
பலரினதும் அவா....‼️

ஊடகத்துறையில் “காவல் நாய்” என்று
நீங்கள் சிறப்பிக்கப்படுவது
ஒரு சமூகத்தை கடித்துக் குதறுவதற்கல்ல…
எல்லா சமூகங்களையும் நீதமாய்
காத்திட வேண்டுமென்பதற்கு..‼️

ஒர் இனத்தின் அடையாளத்தைக் கூட
அறிக்கையிடுவது ஊடக தர்மமில்லை என்று
ஊடக ஒழுக்கம் சொல்லுகையில்…
ஒரு தொப்பியை வைத்து
ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில்
ஏற்றி விடுகிறீர்களே....‼️

ஆனால் தொப்பி அணிந்து
சகோதரங்களுக்கு நாம் வழங்கிய
நிவாரணப் பணிகள் பற்றிய காட்சிகள்
உங்கள் கெமராக்களின் கண்களில்
விழாமலேயே விலகிச் செல்வதன்
மர்மம்தான் என்ன...‼️

கொவிட் - 19 தொற்றின்
ஆபத்துக்களையும்> அச்சுறுத்தல்களையும் பற்றி
மக்களுக்கு விழிப்பூட்டுங்கள்…
தொற்றியவர்களின் பரம்பரைகளை
திரைகளில் காட்டி
தோலுரிப்பதில் என்ன நடந்திடப்போகிறது....‼️

கொவிட் - 19
கொடூரத் தாண்டவம் தேசத்தின்
எல்லைகள் எல்லாம் தலைவிரித்தாடுகையில்…
குடிப்பதற்கு கூல் இல்லாது..
மதுபானத்தினால் வாய்கொப்பளிக்கும்
சமூகத்தின் பலயீனத்தைப் பற்றி உரையாடுங்களேன்....‼️

முஸ்லிம் கிராமங்களுக்கு மட்டுமே
சமூக இடைவெளி குறித்து
பாடம் எடுக்க படையெடுக்கும் நீங்கள்…
மதுபான சாலையில்
சாய்ந்து விழுவோருக்கு
அதை கற்பிப்பதற்கு  மறந்து விடுகிறீர்களே....‼️

கை கழுவுங்கள்..!!! கை கழுவுங்கள்…!!!
என்று அரசாங்கம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்
நிலையில் 500 மேற்பட்ட பாடசாலைகளுக்கு
குடிப்பதற்கு சொட்டு நீரே இல்லையாம்…
அந்தச்செய்தி பற்றி விவாதியுங்களேன்....‼️

பாடசாலைகள் தேசத்தின் முதுகெழும்பல்லவா..‼️

ஏற்றுமதி- இறக்குமதி இல்லாத
இந்நாட்களிலும்
போதைவஸ்துக்கள்
எமது கரைகளை வந்தடைகிறதே....
அதன் பயங்கரம் பற்றியும்
அந்தப் பயங்கரவாதிகள் பற்றியும்
உங்கள் புலனாய்வுக் கழுகுகளைப்
பறக்க விடுங்களேன்…‼️

மக்கள் வயிற்றுப்பசிக்கு தீர்வுகளை
தேடும் இந்நாட்களில்
சர்வதேச விளையாட்டுத் திடலின்
அமைவிடம் குறித்துப் பேசும்
எமது அரசியலின் உச்சம் பற்றி
பேசுங்களேன்....‼️

தேசத்தின் இருதயங்களை அரித்துக்கொண்டிருக்கும்
ஊழல், இலஞ்சம், மோசடி
என்ற கறயான் கூட்டம் பற்றி அறிக்கையிடுங்கள்..
ஏனெனின் அது நீங்கள்
உங்கள் பிள்ளைகளுக்காக கட்டிவைத்திருக்கும்
மாளிகையைக் கூட நாளை அரித்துவிடலாம்....‼️

தவறிழைப்பது யாராக இருந்தாலும்
தாராளமாய்ச் சொல்லுங்கள்
அது ஊடகத்தில் முதல் பணியல்லவா..!
அதற்காக அதிகாரங்ளின்
தவறுகளை மறைப்பதற்காக
உங்கள் கெமராக்களுக்குள்
அடைக்களம்; கொடுத்துவிடாதீர்கள்....‼️

யாராக இருந்தாலும்..
மத விழுமியங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்
மனிதம் வாழ்வதற்கு
எமது தேசத்தில் இருக்கும்
குறைந்த பட்ட நம்பிக்கைகள் அவைதான்..‼️

இறுதியாக…
நீங்கள் இனவாத மதில்கள் அமைத்து
சமூகங்ளை துண்டாடுவை விடுத்து…
பாலங்கள் அமைத்து
மனிதங்களை வளருங்கள்….
அது உங்களுக்கும்
வளரும் உங்கள் பிள்ளைகளுக்கும்…
எனக்கும்
வளரும் எனது பிள்ளைகளுக்கும்…
மனிதம் வாழும்
அழகியதோர் தேசத்தை விட்டுச் சென்ற
நன்மையாவது கிடைக்கும்...‼️

*இனியும் அழுக்கு படிந்த 
செருப்புளை தேடுவதை விட்டு விட்டு
இருதயங்கள் உள்ள மனிதர்களைத் தேடுங்கள்...‼️*

ஏனெனின் ஊடகப் பணி என்பது தர்மமல்லவா…‼️

-அபூ ஷதா -
2 கருத்துரைகள்:

IPPOLUTHU, IVAIKALAAL
NADAPPATHU ODAKAPANIYA
ALLATHU THUVESHAPANIYA
ENRU PURIYAVILLAI.
THADI EDUTHAVAN VETTAIKAARAN
ENRATHU POL IRUKKIRATHU.
NAJEES ATHANAI, KADAISHIVARAI
KILARINAALUM, THUPPIRAVU
KIDAIKKAATHU.
KIDAIKKAATHU.

அரசாங்கத்திற்கே தெரியும் இந்த ஊடகங்களால் நாட்டிற்கு பிரச்சனை என்று இருந்தும் அவைகளுக்கு ஏன் ஒரு முடிவு கட்டாம இருக்குராங்க
Support ?

Post a comment