Header Ads



பிரான்சில் மைதானம் ஒன்றில், மாபெரும் பெருநாள் தொழுகை

பிரான்சில் மைதானம் ஒன்றில் இஸ்லாமியர்கள் 2,000 பேர் வரை தொழுமை மேற்கொண்டனர்.

உலகம் முழுவதும் இன்று ஈத் முபாரக் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், அங்கு பள்ளிவாசல்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இருப்பினும், இஸ்லாமிய அமைப்பு ஒன்றினால் Levallois-Perret நகரில் உள்ள Louison-Bobet மைதானத்தில் சிறப்பு தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகையில் 2,000 பேர் வரை கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டனர்.

சமூக இடைவெளியை பேணும் விதமாக ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இந்த தொழுகை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் கை கழுவும் ஜெல் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. பாதுகாப்பாக அவர்கள் தொழுகை மேற்கொண்டனர்.


3 comments:

  1. இந்த நாட்டுக்கு நிச்சயம் செல்வம் பொங்கும்.
    இந்த அரசுக்கு அல்லாஹ்வின் துனை உண்டு.

    ReplyDelete
  2. கடவுளின் பயமற்ற இலங்கை, இந்தியா பேன்ற நாடுகளுக்கு இந் நிகழ்வு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.
    This event can be a warning to the God-fearless Sri Lanka and India.

    ReplyDelete

Powered by Blogger.