Header Ads



நிழல் அமைச்சரவையை, உருவாக்க சஜித் தீர்மானம்

நிழல் அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சரவையின் செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானித்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது இந்த நிழல் அமைச்சரவையின் பணியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ. பெரேரா, நளின் பண்டார, ஹரின் பெர்னாண்டோ, எரான் விக்ரமரத்ன, ஷரால் லக்திலக்க, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட சிலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் தற்போது அமைச்சரவையில் உள்ள, அனைத்து அமைச்சுக்களுக்கும் நிழல் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களில் நடக்கும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்தல், கருத்து வெளியிடுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.