Header Ads



எந்த வகையிலும் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதில்லை

எந்த வகையிலும் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற அந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி,

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதமர் பதவி, அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைத்தது.

எனினும் 2019ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்ல கட்சியின் நாடாளுமன்றக்குழு தீர்மானித்தது.

இதன் பின்னர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆணையை பெற நாங்கள் எதிர்பார்த்தோம்.

தற்போது மக்களின் அடிப்படை பிரச்சினை அரசியலோ தேர்தலோ அல்ல. உயிர் பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதார ஸ்திரத்தன்மை என்பன அடிப்படை பிரச்சினையாக மாறியுள்ளன.

2015ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் இணைந்து தேர்தல் சம்பந்தமான இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பான பொறுப்பை வழங்க வேண்டும்.

எனினும் தற்போது சிலர் அன்றாட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவது துரதிஷ்டவசமான நிலைமை.

அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் இந்த நிலைப்பாட்டில் இருப்பது வருத்திற்குரியது.

நாங்கள் எமது நாட்டுக்காக முன்வைக்கும் நியாயமான யோசனைகளை கூட ஏற்றுக்கொள்ளாது அதனை விமர்சித்து குறுகிய அரசியல் செய்கின்றனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.